
சென்னை: ஏப்ரல் 4-
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு சாமானிய மக்களிடையே அதிகரித்துள்ளது. இம்முறை சட்டசபை செல்ல வேண்டும் என்பதில் சீமான் தீவிர முனைப்பு காட்டினார். தற்போது தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி உள்ளது. காரைக்குடி தொகுதியின் நொடிக்கு நொடி நிலவரம் தொடர்பாக தொடர்ந்து பார்க்கலாம்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது. மொத்தமாக 85.10% வாக்குகள் பதிவாகின. இதில் பதிவான வாக்குகள் இன்னும் சற்று நேரத்தில் எண்ணப்பட உள்ளது. இந்த தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கப்படும் தொகுதிகளில் ஒன்றாக காரைக்குடி தொகுதி மாறி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் களமிறங்கி இருக்கிறார். சீமான் மட்டுமல்லாமல் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் சிட்டிங் எம்எல்ஏ மாங்குடி, அதிமுக கூட்டணி சார்பாக அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி, தவெக சார்பாக பிரபு ஆகியோர் களத்தில் இருக்கின்றனர். இந்த தொகுதியில் சுமார் 75% வாக்குகள் பதிவாகியது. 4 வேட்பாளர்களும் வலிமையானவர்கள் என்பதால், வெற்றி தோல்வி இடையிலான வாக்குகள் வித்தியாசம் சொற்பமான அளவில் இருக்கும் என்று கருதப்படுகிறது. தற்போது தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் சீமான் வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்து வருகிறார். குறிப்பாக தவெக வேட்பாளர் பிரபிவை விடவும் சீமான் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார். இது நாதகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, முதல் சுற்று வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ளது. இதன் முடிவில் தவெக வேட்பாளர் பிரபு 5,462 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். சீமான் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ மாங்குடி இருவரும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.


















