Home விளையாட்டு பிளே-ஆஃப் சுற்றுக்கான அழுத்தம் அதிகரிப்பு: குஜராத் – ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை

பிளே-ஆஃப் சுற்றுக்கான அழுத்தம் அதிகரிப்பு: குஜராத் – ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை

அகமதாபாத், மே 12- ஐபிஎல் தொடரின் லீக் சுற்று இறு​திக்​கட்​டத்தை எட்டி உள்​ளது. அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்தில் இன்று நடை​பெறும் ஆட்​டத்​தில் புள்​ளி​கள் பட்டியலில் 2-வது இடத்​தில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 3-வது இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி​யுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறது. இரு அணி​களுமே தலா 14 புள்​ளி​களை பெற்​றுள்​ளன. எனினும் நிகர ரன் ரேட் அடிப்​படை​யில் ஹைத​ரா​பாத் அணி 2-வது இடத்தில் உள்​ளது.ஷுப்​மன் கில் தலை​மையி​லான குஜ​ராத் டைட்டன்ஸ் அணி தொடர்ச்​சி​யாக 4 வெற்​றிகளை குவித்​ததன் மூலம் தற்​போது புள்​ளி​கள் பட்​டியலில் வலு​வான நிலை​யில் உள்ளது. கடைசி​யாக அந்த அணி ராஜஸ்​தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்​டத்​தில் 77 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி கண்டிருந்தது. பாட் கம்​மின்ஸ் தலை​மையி​லான சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி தனது கடைசி ஆட்​டத்​தில் பஞ்​சாப் கிங்ஸ் அணியை 33 ரன்கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யிருந்​தது. அந்த ஆட்​டத்​தில் ஹைத​ரா​பாத் அணி 235 ரன்​களை குவித்​திருந்​தது. சரி​யான நேரத்​தில் பார்​முக்கு திரும்​பி​யுள்ள ஹைத​ரா​பாத் அணி, தற்​போது புள்​ளி​கள் பட்​டியலில் வலு​வான நிலை​யில் இருந்​தா​லும், அலட்​சி​ய​மாக இருக்க முடி​யாது. ஏனெனில், பிளே-ஆஃப் சுற்றுக்கான போட்டி மிக​வும் கடுமை​யாக இருப்​ப​தால், சிறிய தவறு கூட அவர்​களுக்​குப் பெரிய பாதிப்பை ஏற்​படுத்​தக்​கூடும். குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​யின் மிகப்​பெரிய பலமே அந்த அணியின் சமநிலை​தான். குறிப்​பாக கேப்​டன் ஷுப்​மன் கில், சாய் சுதர்​சன் ஆகியோரைச் சுற்​றியே அந்த அணி​யின் பேட்​டிங் அமைந்​துள்​ளது. இவர்​கள் இரு​வரும் பவர்​-பிளே ஓவர்​களைச் புத்​தி​சாலித்​தன​மாக எதிர்​கொண்​டு, அணிக்கு வலு​வான தொடக்கத்தை அளித்து வரு​கின்​றனர். ஜாஸ் பட்​லர், வாஷிங்​டன் சுந்​தர் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்​களும் அணிக்கு பலம் சேர்த்து வரு​கின்​றனர்.