Home செய்திகள் தேசிய செய்திகள் ஸ்கைரூட் நிறுவனத்தின் விக்ரம் 1 ராக்கெட் விரைவில் விண்ணில் பாய்கிறது

ஸ்கைரூட் நிறுவனத்தின் விக்ரம் 1 ராக்கெட் விரைவில் விண்ணில் பாய்கிறது

புதுடெல்லி: மே 18 –
இஸ்ரோ முன்​னாள் விஞ்​ஞானி பவன் குமார் சந்தானா அமைத்​துள்ள ரூ.10,000 கோடி மதிப்​பிலான ஸ்கைரூட் ஸ்டார்ட் அப் நிறு​வனத்​தின் விக்​ரம்-1 ராக்​கெட் முதல் முறை​யாக ஸ்ரீஹரி​கோட்​டா​விலிருந்து விரை​வில் விண்​ணில் பாய்​கிறது.
இஸ்ரோ நிறு​வனத்​தில் 8 ஆண்​டு​களுக்கு முன் பணி​யாற்​றிய விஞ்ஞானி பவன் குமார் சந்​தா​னா. அப்​போது அவரது மாத சம்​பளம் ரூ.75,000. இவரும் நாகா பாரத் டாக்கா என்​பவரும் இணைந்து ஸ்கைரூட் ஏரோஸ்​பேஸ் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை ஹைத​ரா​பாத்​தில் தொடங்​கினர். இது​தான் நாட்டின் முதல் விண்​வெளி தொழில்​நுட்ப தனி​யார் நிறு​வனம்.
இந்​நிறு​வனத்​தின் தற்​போதைய மதிப்பு ரூ.10,000 கோடி. இந்​நிறுவனம் தயாரித்த விக்​ரம் 1 என்ற ராக்​கெட் முதல் முறை​யாக ஸ்ரீஹரி​கோட்டா ஏவுதளத்​தில் இருந்து சில வாரங்​களில் விண்​ணில் பாய​வுள்​ளது.
இது குறித்து ஸ்கைரூட் நிறு​வனத்​தின் நிறு​வனர் பவன் குமார் சந்தானா கூறிய​தாவது: மனிதர்​களால் இது​வரை உரு​வாக்​கப்​பட்​ட​திலேயே மிக​வும் சவாலான இயந்​திரம் ராக்​கெட்தான். உலகெங்கிலும் நடந்த ராக்​கெட் ஏவுதல்​களால் நான் பெரிதும் ஈர்க்​கப்​பட்​டேன். இந்த ஆர்​வம் என்னை இஸ்​ரோவுக்கு அழைத்​துச் சென்​றது. இந்​தி​யா​வின் பாகுபலி ராக்​கெட் எல்​விஎம்-3 திட்​டத்​தில் பணி​யாற்​றினேன். அந்த அனுபவம், பிற்​காலத்​தில் ஸ்கைரூட் நிறு​வன​மாக உரு​வெடுப்​ப​தற்​கான தொழில்​நுட்ப மற்​றும் உணர்​வுபூர்​வ​மான அடித்​தளத்தை அமைத்​துக் கொடுத்​தது.
கடந்த 2022-ல் இந்தியாவின் முதல் தனி​யார் ராக்​கெட்​டான ‘விக்​ரம் எஸ்’ ஏவியதன் மூலம் ஸ்கைரூட் ஏற்​கெனவே வரலாற்​றில் தனது பெயரைப் பதிவு செய்​தது. தற்​போது, சுமார் 160 மில்​லியன் டாலர் நிதி முதலீடு மற்​றும் ஒரு பில்​லியன் டாலருக்​கும் அதி​க​மான சந்தை மதிப்​புடன், இந்​தி​யா​வின் முதல் தனி​யார் விண்​வெளித் தொழில்​நுட்ப நிறு​வன​மாக இது உரு​வெடுத்​துள்​ளது
விண்​வெளியை அனை​வருக்​கும் சாத்​தி​ய​மாக்​கு​வதே எங்​களது நோக்​கம். ஒரு வாடகை காரையோ, அல்​லது ஒரு வாடகை விமானத்​தையோ முன்​ப​திவு செய்​வது போல, ராக்​கெட்டை வாடகைக்கு எடுத்து விண்​வெளிக்​குச் செல்​வதும் எதிர்​காலத்​தில் எளி​தாகும். விரை​வில் ‘விக்​ரம் 1′ ராக்​கெட் ஸ்ரீஹரி​கோட்​டா​வில் இருந்து ஏவப்​பட​வுள்​ளது. இது சுமார் 300 கிலோ எடையைச் சுமந்து செல்​லும் திறன் கொண்​டது. நாங்​கள் இனி தயாரிக்​கும் ராக்கெட்டு​கள், விண்​வெளி சுற்​றுப்​பாதைக்​குக் கிட்​டத்​தட்ட ஒருடன் எடையைக் கொண்டு செல்​லும் திறனுடன் இருக்​கும்.
இப்​போது தரவு மையங்​கள் விண்​வெளி​யில் அமைக்​கப்பட உள்ளன. தகவல் தொடர்​பு, நேரடியாக மொபைலுக்​கான தொடர்பு போன்ற அனைத்​துப் பயன்​பாடுகளும் இந்​தத் தேவையை அதிகரிக்​கின்​றன. பெரிய செயற்​கைக்​கோள்​களுக்​குப் பதிலாகச் சிறிய செயற்​கைக்​கோள்​கள் பயன்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. இது ஆயிரக்​கணக்​கான செயற்​கைக்​கோள்​கள் ஒன்​றாக இணைந்து செயல்​படும் விண்​வெளி தொகுப்​பு​களை சாத்தியமாக்கு​கிறது. இதனால் விண்​வெளித் துறை​யின் பொருளா​தா​ரத்​தையே மாற்றி அமைத்​து, ஸ்கைரூட்​ போன்​ற சுறுசுறுப்​பான நிறு​வனங்​களுக்​குப்​ பல வாய்ப்​பு​களை உரு​வாக்குகிறது. இவ்​வாறு பவன்​ குமார்​ தெரிவித்​தார்​.