
கலபுரகி: மே 23-
கர்நாடக மாநிலம் கலபுரகி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு நேரிட்ட பயங்கர சாலை விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.
சித்தாபூர் தாலுகா, இன்ஞலகி கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்களது சொந்த வேலை காரணமாக குரூஸர் வாகனம் மூலம் யாதகிரிக்குச் சென்றுள்ளனர். அங்கு பணிகளை முடித்துக்கொண்டு நள்ளிரவில் மீண்டும் தங்களது ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
வாகனம் லாட்லாபூர் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த லாரி ஒன்று, இவர்களது வாகனத்தின் மீது இடி மின்னல் வேகத்தில் நேருக்கு நேர் மோதியது. மோதிய ரப்பசத்தில் குரூஸர் வாகனம் முற்றிலும் நசுங்கி உருக்குலைந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பலியானவர்களின் விபரம்: தோலுசாப் கியாஷ்வார் (27) ஹுசைன் ஷா (48) , மைபூப் அலி (45), ரசூல் பீ (42)
பாத்திமா அலி (38) விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை உயர் அதிகாரிகள், நசுங்கிய வாகனத்தில் இருந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ஒன்றாகவே உயிரிழந்த சம்பவம் இன்ஞலகி கிராமத்தையே நீங்காத் துயரிலும், கண்ணீரிலும் மூழ்கடித்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக மேலும் விசாரி நடத்தப்பட்டு வருகிறது.


















