Home செய்திகள் தேசிய செய்திகள் வினேஷ் போகத் விவகாரத்தில் மல்யுத்த சம்மேளனத்துக்கு கண்டனம்

வினேஷ் போகத் விவகாரத்தில் மல்யுத்த சம்மேளனத்துக்கு கண்டனம்

புதுடெல்லி, மே 23- இந்​திய மல்​யுத்த வீராங்​க​னை​யான வினேஷ் போகத் கடந்த 2024-ல் நடை​பெற்ற பாரிஸ் ஒலிம்​பிக்​கில் இறுதி சுற்று வரை முன்​னேறி அனை​வரது கவனத்​தை​யும் ஈர்த்​திருந்​தார். ஆனால் துர​திருஷ்ட​வச​மாக கடைசி நேரத்​தில் அவரது உடல் எடை 50 கிராம் அதி​க​மாக இருந்​த​தால் தகுதி நீக்​கம் செய்​யப்​பட்​டார். இதன் பின்​னர் மல்​யுத்த போட்​டிகளில் இருந்து வினேஷ் போகத் ஓய்வு பெறு​வ​தாக அறி​வித்​தார். தற்​போது ஓய்வு முடிவை திரும்ப பெற்​றுள்ள அவர், 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்​சல்ஸ் ஒலிம்​பிக்​கில் பங்​கேற்​கும் வகை​யில், மீண்​டும் மல்​யுத்த போட்​டி​யில் களமிறங்க உள்​ளார். ஆனால், ஊக்​கமருந்து எதிர்ப்பு விதி​களின்​படி, ஓய்​விலிருந்து திரும்​புபவர்​கள் 6 மாதங்​களுக்கு முன்பே அறிவிக்க வேண்​டும் என்ற விதி​யைக் காரணம் காட்டி வரும் ஜூன் 26-ம்​தேதி வரை உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க வினேஷ் போகத்​துக்கு இந்​திய மல்​யுத்த சம்​மேளனம் தடை​வித்​தது. இது ஒரு​புறம் இருக்க பாரிஸ் ஒலிம்​பிக் போட்​டிக்​குப் பிறகு, வினேஷ் போகத் மகப்​பேறு விடுப்​பில் இருந்​தார். அவர் மீண்​டும் விளை​யாட்​டுக்​குத் திரும்ப முயன்ற நிலை​யில் 2026 ஆசிய விளை​யாட்​டுப் போட்​டிகளுக்​கான தேர்​வுத் தகுதி விதி​களில் இந்​திய மல்​யுத்த சம்​மேளனம் திடீர் மாற்​றங்​களைக் கொண்டு வந்​தது. புதிய விதி​களின்​படி, 2025 மற்​றும் 2026-ல் நடந்த குறிப்​பிட்ட உள்​நாட்​டுப் போட்​டிகளில் பதக்​கம் வென்​றவர்​கள் மட்​டுமே தேர்​வுத் சோதனை​களில் பங்​கேற்க முடி​யும் என அறிவிக்​கப்​பட்​டது. இதனால், விடுப்​பில் இருந்த வினேஷ் போகத் வரும் 30, 31 ஆகிய தேதி​களில் நடை​பெற இருக்​கும் ஆசிய விளை​யாட்​டுத் தேர்​வுப் போட்​டிகளில் பங்​கேற்க முடி​யாத​படி “தகு​தி​யற்​றவர்” என இந்​திய மல்​யுத்த சங்​கம் அறி​வித்​தது. இதனால் வரும் 30 மற்​றும் 31-ம் தேதி​களில் நடை​பெற உள்ள ஆசிய விளை​யாட்டு போட்​டிக்​கான வீரர்​கள் தேர்​வில் வினேஷ் போகத் கலந்து கொள்ள முடி​யாத நிலை உரு​வானது. இதை எதிர்த்து வினேஷ் போகத் டெல்லி உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார். இதை கடந்த 18-ம் தேதி விசா​ரித்த தனி நீதிபதி மனுவை தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டார். தனி நீதிப​தி​யின் தீர்ப்பை எதிர்த்து வினேஷ் போகத் மேல்​முறை​யீடு செய்​தார். இந்த மனுவை நேற்று தலைமை நீதிபதி டி.கே.உ​பாத்​யாயா மற்​றும் நீதிபதி தேஜஸ் காரியா அடங்​கிய அமர்வு விசா​ரித்​தது. அப்​போது தனிப்​பட்ட மோதல்​கள் அல்​லது கருத்து வேறு​பாடு​கள் காரண​மாக சர்​வ​தேச வீராங்​க​னை​யின் விளை​யாட்டு வாழ்க்கை பாதிக்​கப்​படக் கூடாது என்​றும், சம்​மேளனம் பழி​வாங்​கும் நோக்​கில் செயல்​படு​வது போல் நடக்​கக் கூடாது என்​றும் நீதி​மன்​றம் எச்​சரித்​தது.