Home செய்திகள் தேசிய செய்திகள் வங்கியில் ஓய்வூதியம் பெற 9 கி.மீ தூரம் 90 வயது மாமியாரை சுமந்து சென்ற மருமகள்

வங்கியில் ஓய்வூதியம் பெற 9 கி.மீ தூரம் 90 வயது மாமியாரை சுமந்து சென்ற மருமகள்

ராய்ப்பூர், மே 26- சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டம் மைன்பாட் என்ற பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த சுக்மானியா பாய், தனது 90 வயது மாமியாரை முதுகில் சுமந்தபடி சுட்டெரிக்கும் வெயிலில், காட்டுப் பாதைகள் மற்றும் ஓடைகளைக் கடந்து 9 கிலோ மீட்டர் நடந்து சென்றுள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. வங்கியில் ஓய்வூதியம் (சுமார் ₹1,500) பெற வேண்டுமானால், பயனாளிகள் நேரில் வந்து கைரேகை அல்லது அடையாளச் சரிபார்ப்பு செய்ய வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ளதால், இப்பெண் கடந்த சில மாதங் களாகவே தன் மாமியாரைச் சுமந்து இந்தத் துயரப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.