Home செய்திகள் தேசிய செய்திகள் குல்மார்க்கில் ரோப் கார் பழுது: 300 சுற்றுலாப் பயணிகள் மீட்பு

குல்மார்க்கில் ரோப் கார் பழுது: 300 சுற்றுலாப் பயணிகள் மீட்பு

குல்மார்க்: மே 26-
உலகிலேயே இரண்டாவது நீளமான மற்றும் உயரமான ரோப் கார் சேவை காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இது ‘கோண்டோலா’ என அழைக்கப்படுகிறது. முதல் கட்ட ரோப் காரில் 8,694 அடி உயரமுள்ள காங்தோரி பள்ளத்தாக்கு பகுதிக்கும், 2-வது கட்ட ரோப் காரில் 13,058 அடி உயரத்தில் உள்ள காங்தோரி மலைப் பகுதிக்கும் செல்லலாம்.
இந்த ரோப் காரில் நேற்று சுமார் 300 சுற்றுலாப் பயணிகள் சென்று கொண்டிருந்தபோது, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இந்த பழுதை உடனடியாக சரிசெய்ய முடியவில்லை. இதனால் அதில் பயணம் செய்த குழந்தைகள் மற்றும் பெண்கள் பீதியடையத் தொடங்கினர்.
இதையடுத்து ராணுவத்தினர், போலீஸார், மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் அடங்கிய மீட்புக் குழு உடனடியாக சென்று அந்தரத்தில் தொங்கிய சுற்றுலாப் பயணிகளை மீட்கும் நடவடிக் கையில் இறங்கினர். 8 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு 300 சுற்றுலாப் பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.