Home செய்திகள் உலக செய்திகள் பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்

பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்

வாஷிங்டன், ஜூன் 2- மத்திய கிழக்கு பகுதியில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்பும் லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் அதிரடி வான்வழித் தாக்குதல்கள் தற்போது எல்லையை கடந்து லெபனான் தலைநகர் பெய்ரூட்-ஐ வரை சென்றுள்ளது. இது ஈரானுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது மட்டும் அல்லாமல், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டு நட்பு முறியும் அளவிற்கு சென்றுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் கடுமையாக திட்டியுள்ளார். “நீ என்ன செய்கிறாய்?” என்று கோபத்துடன் கேட்ட டிரம்ப், நெதன்யாகுவை “ பைத்தியக்காரனா நீ..” என்று அழைத்ததாக வெளியான செய்திகள் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் காரணமாக ஈரான் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை முழுமையாக நிறுத்தப் போவதாக எச்சரித்துள்ளது. இந்த நிலையில்,
டிரம்ப், நெதன்யாகுவை நேற்று இரவு அழைத்துப் பேசினார்.
இந்த உரையாடலில் டிரம்ப் மிகுந்த கோபத்துடன் இருந்துள்ளதாகவும், இஸ்ரேலின் அதிகப்படியான ராணுவ நடவடிக்கை உலக அளவில் இஸ்ரேலுக்கு எதிரான கோபத்தை அதிகரிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.
“நான் உன்னை காப்பாற்றுகிறேன், நீ பைத்தியக்காரத்தனமாக செயல்படுகிறாய்” என்று டிரம்ப் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிரம்ப்-நெதன்யாகு உரையாடல் அமெரிக்கா தொடர்ந்து பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையே கடும் வாக்குவாதம் நிறைந்த தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது.