Home செய்திகள் தேசிய செய்திகள் காதலியை தேடி வந்த பிஓகே இளைஞர் கைது

காதலியை தேடி வந்த பிஓகே இளைஞர் கைது

ஸ்ரீநகர், ஜூன் 3- ஜம்மு காஷ்மீரை சேர்ந்த காதலியை கரம்​பிடிக்க ஆக்கிரமிப்பு காஷ்மீரை (பிஓகே) சேர்ந்த இளைஞர் எல்லை தாண்டி காஷ்மீருக்​குள் நுழைந்​தார். இந்​திய ராணுவ வீரர்​கள், அவரை சுற்றி வளைத்​துப் பிடித்​தனர். ஆக்​கிரமிப்பு காஷ்மீரின் முசாப​ரா​பாத் அருகே உள்ள பைன்​காடியை சேர்ந்​தவர் ஜீஷான் அகமது மிர். அவருக்​கும் காஷ்மீரின் உரி அருகே உள்ள துல்​வாரி கிராமத்​தைச் சேர்ந்த இரும் பானுவுக்கும் இடையே சமூக வலை​தளம் வாயி​லாக பழக்​கம் ஏற்பட்​டது. நாளடை​வில் இரு​வருக்​கும் இடையே காதல் மலர்ந்​தது. தனது காதலியை சந்​திப்​ப​தற்​காக ஜீஷான் அகமது மிர் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து நேற்று முன்​தினம் காலை காஷ்மீரின் உரி மாவட்​டம், சிலிகோட் பகு​திக்​குள் நுழைந்​தார். இந்​திய ராணுவ வீரர்​கள், அவரை சுற்றி வளைத்​துப் பிடித்​தனர். ராணுவ வீரர்​களிடம் ஜீஷான் அகமது மிர் அளித்த வாக்​கு மூலத்தில், ”எனது முன்​னோர் காஷ்மீரின் துல்​வாரி கிராமத்​தைச் சேர்ந்​தவர்​கள் ஆவர். அந்த பகு​தியை சேர்ந்​தவர் என்​ப​தால் இரும் பானுவுடன் சமூக வலை​ தளத்​தில் பழக்​கம் ஏற்​பட்​டது. அவரை திரு​மணம் செய்ய எல்​லை​யைக் கடந்து இந்​தி​யா​வுக்​குள் நுழைந்தேன். நான் இந்​தி​யா​வில் வாழ விரும்​பு​கிறேன்” என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து காஷ்மீர் போலீ​ஸாரிடம் ஜீஷான் அகமது மிர் ஒப்​படைக்​கப்​பட்​டார். அவரிடம் போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். சம்​பந்​தப்​பட்ட பெண்​ணிட​மும் காஷ்மீர் போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். இந்த விவ​காரம் தொடர்​பாக மத்​திய உளவு அமைப்​பு​கள்​ தனி​யாக வி​சா​ரணை நடத்​தி வருகின்​றன.