Home செய்திகள் தேசிய செய்திகள் அண்ணாமலை ராஜினாமாவை ஏற்றது பாஜக –

அண்ணாமலை ராஜினாமாவை ஏற்றது பாஜக –

புதுடெல்லி, ஜூன் 5- தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது. முன்னதாக, பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீனிடம் ராஜினாமா கடிதத்தை அண்ணாமலை அளித்திருந்தார். இந்நிலையில், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அண்ணாமலை கொடுத்த ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக டெல்லியில் உள்ள பாஜக தலைமையகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்ணாமலை, புதிய கட்சி தொடங்​கப் போவ​தாக செய்​தி​கள் வெளி​யாகின. சட்​டப்​பேரவை தேர்​தலுக்கு பிறகு, இது தொடர்​பாக தனது ஆதர​வாளர்களுடன் அவர் தீவிர ஆலோ​சனை​யில் ஈடு​பட்டு வந்​தார். இந்​தச் சூழலில், கடந்த 1-ம் தேதி டெல்லி சென்ற அண்​ணா​மலை, பாஜக தேசி​யத் தலை​வர் நிதின் நவீனை சந்​தித்​து, கட்​சி​யில் இருந்து வில​கு​வ​தாக கடிதம் கொடுத்​த​தாக தகவல் வெளி​யானது. பின்​னர், மத்​திய உள்துறை அமைச்​சர் அமித் ஷாவை​யும் சந்தித்துப் பேசி​னார். ஆனால், அவரது ராஜினாமா கடிதம் உடனடியாக ஏற்கப்படவில்லை. அண்​ணா​மலையை சமரசம் செய்ய தீவிர முயற்​சிகள் மேற்​கொள்​ளப்​பட்​டதாகக் கூறப்பட்டது. பிரதமர் நரேந்​திர மோடியை​யும் சந்​தித்​துப் பேசி​விட்​டு, இன்று தமிழகம் திரும்பி தனது முடிவை அறிவிக்க அண்​ணா​மலை திட்டமிட்​டுள்​ள​தாக தகவல்​கள் வெளியாகின. மேலும்​, சமூக ஊடகங்கள் வாயி​லாக நேரடி​யாக மக்​களிடம் உரை​யாட உள்ளதாகவும் அண்ணா​மலை கூறியிருந்தார்.