Home மாவட்டங்கள் பெங்களூர் சிபிஎஸ்சி குழப்பம் மாணவர்கள் பரிதவிப்பு

சிபிஎஸ்சி குழப்பம் மாணவர்கள் பரிதவிப்பு

சென்னை: ஜூன் 8-
சிபிஎஸ்இ இந்த ஆண்டு புதி​தாக அறி​முகப்​படுத்​திய ஆன்​லைன் மதிப்​பீட்டு முறை மற்​றும் விடைத்​தாள் நகல் குளறுபடியால் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழு​திய மாணவர்​கள் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.
மேலும், தவறான பாடத் தேர்வு முறை​யால் மாணவர்​களின் உயர்​கல்வி வாய்ப்​பும் பறி​போகும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது.
சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வை நாடு முழு​வதும் 17.68 லட்சத்துக்​கும் மேற்​பட்ட மாணவ, மாணவி​கள் எழு​தினர். தேர்வு முடிவு​கள் மே 13-ம் தேதி வெளி​யாகின. 85.20 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்​றனர்.
கடந்த ஆண்​டை​விட இந்த ஆண்டு தேர்ச்சி 3.19 சதவீதம் குறைந்​தது. விடைத்​தாள் மதிப்​பீட்​டில்
இந்த முறை ‘ஆன்​-ஸ்​கிரீன் மார்க்​கிங்’ (OSM) எனப்​படும் ஆன்​லைன் மதிப்​பீட்டு முறை அறி​முகம் செய்​யப்​பட்​டது. அதாவது, மாணவர்​களின் விடைத்​தாள்​கள் அனைத்​தும் ஸ்கேன் செய்​யப்​பட்​டு, ஆன்லைனிலேயே ஆசிரியர்​கள் திருத்​தப் பணியை மேற்கொண்டனர். இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்​ததற்​கும் ஆன்​லைன் மதிப்​பீட்டு முறை​தான் காரணம் என்ற குற்​றச்​சாட்​டும் பரவலாக எழுந்​தது. எதிர்​பார்த்த மதிப்​பெண் கிடைக்​காமல் நாடு முழு​வதும் ஆயிரக்​கணக்​கான மாணவர்​கள் அதிர்ச்சி அடைந்​தனர்.
இது ஒரு​புறம் இருக்க, இன்​னொரு புறம் சிபிஎஸ்இ வழங்​கி​யுள்ள முக்​கிய பாடங்​கள், கூடு​தல் பாடங்​கள் பட்​டியலை தேர்வு செய்வதில் சிக்​கல் உரு​வாகி​யுள்​ளது. பள்ளி நிர்​வாகங்​கள் இதை மாற்றி தேர்வு செய்​வ​தால், மாணவர்​கள் பாதிக்​கப்​படு​கின்​றனர். குறிப்​பாக, விவ​சா​யம், தோட்​டக்​கலை, வனவியல் உள்​ளிட்ட தொழிற்​கல்வி படிப்​பு​களில் மாணவர்​கள் சேர முடி​யாத சூழல் ஏற்பட்​டுள்​ளது.தமிழ்​நாடு வேளாண் பல்​கலைக்​கழகம் மேற்​கண்ட படிப்​பு​களுக்கு கணிதம், இயற்​பியல், வேதி​யியல், உயி​ரியல் பாடங்​கள் அல்​லது இயற்​பியல், வேதி​யியல், தாவர​வியல், விலங்​கியல் பாடங்​கள் அல்​லது இயற்​பியல், வேதி​யியல், உயி​ரியல், கணித அறி​வியல், உயிரி தொழில்​நுட்​பம் உள்​ளிட்ட சில பாடங்​களை தகு​தி​யாக வைத்​துள்​ளது. ஆனால், சிபிஎஸ்இ பாடத்​திட்​டத்​தில், முக்​கிய பாடங்​கள், கூடு​தல் பாடங்​கள் என பிரிக்​கப்​பட்​டுள்​ள​தால், பாடங்​களை தேர்வு செய்​வ​தில் பள்​ளி​களுக்கு குழப்​பம் ஏற்​பட்​டு, சில பள்​ளி​கள், இயற்​பியல், வேதி​யியல், உயி​ரியல் பாடங்​களு​டன் கணினி அறி​வியல் உள்​ளிட்ட முக்​கிய பாடங்​களை தேர்வு செய்​வதற்கு பதில், கூடு​தல் பாட வரிசை​யில் உள்ள உடற்​கல்வி பாடத்தை தேர்வு செய்​கின்​றன. கூடு​தல் பாட வரிசை​யில் கணினி அறி​வியல் பாடத்தை தேர்வு செய்து மாணவர்​களுக்கு கல்வி கற்​பிக்​கின்​றன.