Home விளையாட்டு பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

லண்டன், ஜூன் 15- நடப்பு ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் குரூப் சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தானை 64 ரன்களில் வீழ்த்தியது இந்திய அணி.இந்த தொடர் இங்​கிலாந்​து மற்றும் வேல்ஸில் நடை​பெற்று வரு​கிறது. இந்​திய நேரப்​படி நேற்று இரவு 7 மணிக்கு எட்​க​பாஸ்​டன் மைதானத்​தில் நடை​பெற்ற குரூப்-ஏ ஆட்​டத்​தில் இந்​தி​யா, பாகிஸ்​தான் அணி​கள் மோதின. முதலில் இந்​திய அணி விளை​யாடியது.
தொடக்க ஆட்​டக்​காரர்​களாக ஷெபாலி வர்​மா, ஸ்மிருதி மந்​தனா ஆகியோர் களமிறங்​கினர். ஷெபாலி வர்மா 5 பந்​துகளில் 6 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழந்​தார்.அதன் பின்​னர் வந்த ஜெமிமா ரோட்​ரிக்ஸ் ஒரு ரன்​னில் பெவிலியன் திரும்​பி​னார். ஸ்மிருதி விளாசல்: இதையடுத்து 3-வது விக்​கெட்​டுக்கு ஸ்மிரு​தி​யுடன் கேப்​டன் ஹர்​மன்​பிரீத் கவுர் ஜோடி சேர்ந்​தார். இந்த ஜோடி நிதானத்​துடன் விளை​யாடி ரன்​களைச் சேர்த்​தது. அதே​நேரத்​தில் ஸ்மிருதி மந்​தனா பவுண்​டரி​களாக விளாசித் தள்​ளி​னார். இதனிடையே ஹர்​மன்​பிரீத் கவுர் 35 பந்​துகளில் 36 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழந்​தார். மறு​முனை​யில் நின்ற ஸ்மிருதி மந்​தனா 44 பந்​துகளில் 68 ரன்​கள் குவித்து (2 சிக்​ஸர், 9 பவுண்​டரி​கள்) வீழ்ந்​தார். பாரதி புல்​மாலி 1, ரிச்சா கோஷ் 34 ரன்​கள் சேர்த்து அவுட்​டா​யினர். கடைசி​யாக தீப்தி சர்மா 12 ரன்​களும், ஸ்ரே​யங்கா பாட்​டீல் ஒரு ரன்​னும் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது இந்தியா.பாகிஸ்​தான் தரப்​பில் சாடியா இக்​பால், ஃபாத்​திமா சனா ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை​யும், டாஸ்​மியா ருபாப், ரமீன் ஷமிம் ஆகியோர் தலா ஒரு விக்​கெட்​டை​யும் சாய்த்​தனர். இதைத் தொடர்ந்து 171 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் பாகிஸ்​தான்​ மகளிர்​ அணி பேட்​டிங்​ செய்​ய ஆயத்​த​மானது. அந்த அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. 77 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.