
சேலம்: ஜூன் 18-
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழையால் ஒகேனக்கல் காவரி ஆற்றல் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்திருக்கிறது. காவேரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கான நீர் வரத்து அதிகரித்திருக்கிறது.
காவரி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்தானது அதிகரித்துள்ள நிலையில், சுற்றுட்டார பகுதிகளான பாலாறு தொப்பையாறு போன்ற ஆறுகளின் சுற்றுவட்டார பகுதியில் பெய்த மழையின் காரணமாகவும் நீர் வரத்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.
இன்று காலை 8:00 மணி நிலவரப்படி 539 கனஅடியாக அதிகரித்திருக்கிறது. நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி 193 கனஅடி மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 8:00 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கான நீர் வரத்தானது 539 கனஅடியாக அதிகரித்திருக்கிறது. ஆனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதற்கான காரணம் என்னவென்றால் மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவையாக 1000 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


















