Home விளையாட்டு டி20 போட்​டிகளில் அதிக ரன் – கைரன் பொல்லார்ட் சாதனை

டி20 போட்​டிகளில் அதிக ரன் – கைரன் பொல்லார்ட் சாதனை

புதுடெல்லி, ஜூன் 22- டி20 கிரிக்​கெட் போட்​டிகளில் மேற்கு இந்​தி​யத் தீவுகளைச் சேர்ந்த வீரர் கைரன் பொல்லார்ட் அதிக ரன்​கள் குவித்து சாதனை படைத்​துள்​ளார். அமெரிக்​கா​வின் டல்​லாஸ் நகரில் நேற்று எம்ஐ நியூ​யார்க், வாஷிங்​டன் பிரீடம் அணி​களுக்கு இடையி​லான மேஜர் லீக் டி20 போட்டி நடை​பெற்​றது. முதலில் விளை​யாடிய வாஷிங்​டன் பிரீடம் அணி​யினர் 5 விக்​கெட் இழப்​புக்கு 245 ரன்​கள் குவித்​தனர். பின்னர் விளை​யாடிய எம்ஐ நியூ​யார்க் அணி 20 ஓவர்​களில் 6 விக்கெட் இழப்​புக்கு 215 ரன்​கள் எடுத்து 30 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி கண்​டது. இதில் எம்ஐ நியூ​யார்க் அணி​யைச் சேர்ந்த வீரர் கைரன் பொல்லார்ட் 56 பந்​துகளில் 100 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். இந்த போட்​டி​யின்​போது டி20 போட்​டிகளில் அதிக ரன்கள் குவித்​திருந்த கிறிஸ் கெயி​லின் சாதனையை முந்​தி​னார் பொல்லார்ட். கிறிஸ் கெயில் 14,562 ரன்​கள் எடுத்​திருந்​தார். தற்போது பொல்​லார்ட் 736 போட்​டிகளில் விளை​யாடி 14,582 ரன்கள் குவித்து முதலிடத்​துக்கு முன்​னேறி​னார். அலெக்ஸ்ஹேல்ஸ் 14,449 ரன்​களு​டன் 3-வது இடத்​தி​லும், ஜாஸ் பட்லர் 14,371 ரன்​களு​டன் 4-வது இடத்​தி​லும் உள்​ளனர்.