Home விளையாட்டு பண்ட், ஸ்டார்க், வெங்கடேஷ் அய்யர் – ஐபிஎல் வரலாறு காணாத சம்பளக் குறைப்பு!

பண்ட், ஸ்டார்க், வெங்கடேஷ் அய்யர் – ஐபிஎல் வரலாறு காணாத சம்பளக் குறைப்பு!

மும்பை, ஜூன் 24-ஐபிஎல் ஏலங்களில் பெரிய சம்பளம் என்று வாய்பிளந்த வீரர்கள் சிலருக்கு பெரிய அளவில் சம்பளக் குறைப்பு நிகழ்ந்துள்ளது. இந்தப் பட்டியலில் கடைசியாக இணைந்திருப்பவர் ரிஷப் பண்ட். ஐபிஎல் 2025 தொடருக்காக ரூ.27 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட ரிஷப் பண்ட் இப்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ரூ. 15 கோடியாகக் குறைக்கப்பட்ட சம்பளத்தில் சென்றுள்ளார். அதே போல் சம்பளக் குறைப்பு கண்ட வீரர்கள் பட்டியல் இதோ: 1.வெங்கடேஷ் அய்யர்: 2025 ஐபிஎல் ஏலத்தில் ரூ.23.75 கோடிக்கு கேகேஆர் அணியால் தக்கவைக்கப்பட்ட வெங்கடேஷ் அய்யர் 2026 சீசனுக்கு முன்னதாக வெறும் ரூ.7 கோடிக்கு ஆர்சிபி அணியில் சேர்ந்தார். 2025 ஏலத்தின்போது வெங்கடேஷ் ஐயரை வாங்குவதற்காக கடும் ஏலப்போட்டியில் இறங்கியுஜ் அவரை கைப்பற்ற முடியாமல் போன ஆர்சிபி ஓர் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த தொகையில் அவரை அணிக்குள் கொண்டு வந்தது. ஆரம்பத்தில் மாற்று பேட்ஸ்மேனாக அணியில் சேர்க்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர், சீசனின் முக்கியமான கட்டத்தில் தனது திறமையை வெளிப்படுத்தினார். முக்கிய வீரர்களான ஃபில் சால்ட் மற்றும் ஜேக்கப் பெத்தெல் காயம் காரணமாக வெளியேறிய நிலையில் கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய அவர், ஆறு இன்னிங்ஸ்களில் 209 ரன்கள் குவித்து, 186.60 என்ற அதிரடி ஸ்டிரைக் ரேட்டை பதிவு செய்தார். இதன் மூலம், வெங்கடேஷ் ஐயர் தனது ஐபிஎல் வாழ்க்கையில் சாம்பியன் பட்டத்தை வென்ற இரண்டு வெவ்வேறு அணிகளில் ஆடிய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அவர் 2024-ல் கேகேஆர் அணி, 2026-ல் ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்ற போது இவ்வணிகளில் ஆடினார். 2. ரூ.18.5 கோடியிலிருந்து ரூ.2.5 கோடிக்கு வீழ்ந்த சாம் கரன் 2024 ஐபிஎல் தொடரில் ரூ.18.5 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியினால் எலம் எடுக்கப்பட்ட சாம் கரன், 2025-ல் சிஎஸ்கே அணியில் ரூ.2.5 கோடி சம்பளத்தில் இணைந்தார். 5 போட்டிகளில்தான் ஆட முடிந்தது. இது ஒரு மோசமான மாற்றமாக சாம் கரனுக்கு அமைந்தது. 3.ரூ.15 கோடியிலிருந்து வெறும் 1 கோடிக்கு சரிந்த கைலி ஜேமிசன்: நியூஸிலாந்து ஸ்டார் ஆல்ரவுண்டர் இவர் ஐபிஎல் 2021-ல் பெரிய எதிர்பார்ப்புடன் ஆர்சிபி அணியினால் ரூ. 15 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். தென் ஆப்பிரிக்கா ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் போன பிறகே உயரமான ஆல்ரவுண்ட தேவை என்று கைலி ஜேமிசனை அணியில் எடுத்தனர். சீசன் சரிவர அமையவில்லை, கோவிட் -19 தாக்கம் இவற்றால் இவரால் 2022 ஐபிஎல் தொடரில் ஆட முடியவில்லை இதனையடுத்து ஆர்சிபி இவரை ரூ.1 கோடி சம்பளத்தில் சிஎஸ்கேவுக்கு விடுவித்தது.