
புதுடெல்லி, ஜூன் 25- ஜெர்மனியின் சுஹல் நகரில் நடைபெற்று வரும் ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலக துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவின் வன்ஷிகா சவுத்ரி, ஷிவா நர்வால் ஜோடிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. நேற்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி ஜூனியர் பிரிவில் வன்ஷிகா, ஷிவா ஜோடி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளியைக் கைப்பற்றியது.





















