Home விளையாட்டு நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது கேப் வெர்டே: வெளியேறியது உருகுவே

நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது கேப் வெர்டே: வெளியேறியது உருகுவே

நியூயார்க், ஜூன் 27- நடப்பு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக்-அவுட் சுற்றுக்கு கேப் வெர்டே அணி முன்னேறி வரலாறு படைத்துள்ளது. மறுமுனையில் இரண்டு முறை சாம்பியனான உருகுவே அணி குரூப் சுற்றோடு வெளியேறி உள்ளது. அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடைபெற்று வரும் இந்த உலகக் கோப்பை தொடர் அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. வரும் திங்கட்கிழமை முதல் நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் நடைபெற உள்ளன. ரவுண்ட் ஆப் 32 சுற்றுக்கு இதுவரை 26 அணிகள் முன்னேறி உள்ளன. இன்னும் 6 அணிகள் மட்டுமே இந்த சுற்றுக்கு தகுதி பெற வேண்டி உள்ளது. நார்வே vs பிரான்ஸ்அ மெரிக்காவின் பாஸ்டனில் இந்திய நேரப்படி சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற குரூப்-ஐ பிரிவு ஆட்டத்தில் நார்வே மற்றும் பிரான்ஸ் அணிகள் விளையாடின. இதில் கால்பந்து ரசிகர்கள், பார்வையாளர்கள், ஆர்வலர்கள் என அனைவரது கவனமும் பிரான்ஸின் எம்பாப்பே, நார்வே அணியின் எர்லிங் ஹாலண்ட் ஆகியோர் மீது இருந்தது. ஏனெனில், இருவரும் இந்த தொடரில் அதிக கோல்கள் பதிவு செய்த வீரர்களின் பட்டியலில் உள்ளனர். அதனால் அவர்கள் மீது எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. இந்த சூழலில் ஹாலண்ட் ஆட்டத்தின் தொடக்க லெவனில் இடம்பெறவில்லை.ஆனால், ஆட்டத்தில் நடந்ததோ வேறு. பிரான்ஸின் உஸ்​மான் டெம்​பலே ஹாட்ரிக் கோல் பதிவு செய்தார். இதன் மூலம் பிரான்ஸ் அணிக்காக உலகக் கோப்பை தொடரில் ஹாட்ரிக் கோல் பதிவு செய்த மூன்றாவது வீரர் ஆனார் உஸ்​மான் டெம்​பலே. ஆட்டம் தொடங்கி முதல் 32 நிமிடங்களுக்குள் இந்த மூன்று கோல்களையும் அவர் பதிவு செய்திருந்தார். 21-வது நிமிடத்தில் நார்வே அணியின் ஆஸ்கார்ட் கோல் பதிவு செய்தார். அதன் பின் அந்த அணி கோல் பதிவு செய்யவில்லை. ஸ்டாப்பேஜ் நேரத்தில் கோல் பதிவு செய்தார் பிரான்சின் துவே. இதன் மூலம் பிரான்ஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் சக அணி வீரர்கள் கோல் பதிவு செய்ய எம்பாப்பே அஸிஸ்ட் செய்து உதவினார். ரவுண்ட் ஆப் 32 சுற்றில் பிரான்ஸ் அணி, ஸ்வீடனை எதிர்கொள்கிறது. நார்வே அணி, ஐவரி கோஸ்ட் உடன் விளையாடுகிறது.