Home விளையாட்டு கானாவை வீழ்த்தி நாக்​-அவுட் சுற்றில் தடம்​ப​தித்த குரோஷயா

கானாவை வீழ்த்தி நாக்​-அவுட் சுற்றில் தடம்​ப​தித்த குரோஷயா

பிலடெல்​பியா: ஜூன் 29-
உல​கக் கோப்பை கால்​பந்​துப் போட்​டி​யின் எல் பிரிவு லீக் ஆட்​டத்​தில் குரோஷியா 2-1 என்ற கோல் கணக்​கில் கானாவை வீழ்த்தி நாக்​-அவுட் சுற்​றில் தடம்​ப​தித்​தது.
இந்த ஆட்​டம் நேற்று அதி​காலை 2.30 மணிக்கு பிலடெல்​பி​யா​ மைதானத்​தில் தொடங்​கியது. ஆட்​டம் தொடங்​கிய 31-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் பீட்​டர் சுசிக் ஒரு கோலடித்து அணிக்கு முன்​னிலை பெற்​றுத் தந்​தார். முதல் பாதி வரை 1-0 என்ற நிலை​யில் குரோஷியா முன்​னிலை​யில் இருந்​தது.
ஆனால் 2-வது பாதி​யில் சுதா​ரித்து விளை​யாடிய கானா வீரர்​கள் 73-வது நிமிடத்​தில் ஒரு கோலடித்து 1-1 என்ற கணக்​கில் சமநிலையை ஏற்​படுத்​தினர். அந்த அணி​யின் டெரிக் லுகாஸன் இந்த கோலை அபார​மான வகை​யில் அடித்​தார். இதனால் 1-1 என்ற கணக்​கில் சமநிலை ஏற்​பட்​டது. எனவே, இந்​தப் போட்​டி​யில் எந்த அணி வெற்றி பெறும் என்ற பரபரப்​பானநிலை ஏற்​பட்​டது.இதையடுத்து இரு அணி வீரர்​களும் கோலடிக்க தீவிர முயற்​சி​யில் இறங்​கினர். குரோஷிய அணி வீரர்​களின் முயற்​சிக்கு 83-வது நிமிடத்​தில் பலன் கிடைத்​தது. கார்​னர் பகு​தியி​லிருந்து நட்​சத்​திர வீரர் லூகா மோட்​ரிக் அடித்த பந்தை கோல் வலைக்கு அரு​கில் இருந்த நிகோலாவிளாசிக் தலை​யால் முட்டி அற்​புத​மாக கோலாக்கி​னார்.
இதனால் 2-1 என்ற கணக்​கில் குரோஷியா முன்​னிலை பெற்​றது. இறுதி வரை இந்த நிலை நீடிக்​கவே 2-1 என்ற கணக்​கில் குரோஷியா வெற்றி பெற்​றது. நிகோலா விளாசிக்​கின் இந்த கோலால் அந்த அணி வெற்றி பெற்​றது. இந்​தப் பிரி​விலிருந்து இங்கிலாந்​து, குரோஷி​யா, கானா அணி​கள் நாக்​-அவுட் சுற்​றுக்​கு முன்​னேறின. புள்​ளி​கள்​ பெறாத ப​னா​மாஅணி தொடரிலிருந்​து வெளியேறியது. நாக்-அவுட் சுற்று ஆட்டங்களின் அட்டவணை
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்து 32 அணிகள் மோதும் நாக்-அவுட் சுற்று ஆட்டங்களின் அட்டவணை வெளியாகியுள்ளது. நடப்புச் சாம்பியன் அர்ஜெண்டினாவுடன் வரும் ஜூலை 4-ம் தேதி கேப்வெர்டே அணி மோதவுள்ளது.
நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் இன்று முதல் (ஜூலை 29-ம் தேதி முதல் ஜூலை 4-ம் தேதி வரை நடைபெறவுள்ளன