Home விளையாட்டு கடைசி நேர கோலால் கனடா அசத்தல் வெற்றி

கடைசி நேர கோலால் கனடா அசத்தல் வெற்றி

லாஸ் ஏஞ்சல்ஸ், ஜூன் 30- பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் அமெரிக்​கா​வின் லாஸ் ஏஞ்​சல்ஸ் நகரில் உள்ள சோபி மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற நாக் அவுட் சுற்று ஆட்​டத்​தில் கனடா – தென் ஆப்பிரிக்கா அணி​கள் மோதின. 22-வது நிமிடத்​தில் கனடா அணிக்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்​தது. ஸ்டீபன் யுஸ்​டாக்​கியோ ஃபிரீ-கிக் மூலம் உதைத்த பந்து 6 அடி தூர பாக்ஸ் பகு​திக்​குள் எதிரணி​யால் மார்க்​கிங் செய்​யப்​ப​டா​மல் தனி​யாக நின்ற டெரெக் கார்​னிலியஸுக்கு சென்​றது. அவர், தலை​யால் முட்​டிய பந்து தரை​யில் பட்டு நேராக கோல்​கீப்​பர் ரான்​வென் வில்​லி​யம்​ஸிடம் தஞ்​சம் அடைந்​தது. முதல் பாதி​யின் இறுதி நிமிடங்​களில் செட்​-பீஸ்​கள் மூலம் கனடாவுக்​குச் சிறந்த வாய்ப்​பு​கள் கிடைத்​தன. அடுத்​தடுத்து இலக்கை நோக்கி வந்த பந்​துகளில் ஒன்​றைத் தென் ஆப்​பிரிக்​கா​வின் மோடிபா தடுத்து வெளி​யேற்​றி​னார். இதன் பின்​னர் கனடா அணி​யின் பொம்​பிம்​பிட்டோ தலை​யால் முட்​டிய பந்​தை​யும், அதைத் தொடர்ந்து புக்​கானன் மிக அரு​கி​லிருந்து அடித்த ஷாட்​டை​யும் கோல்​கீப்​பர் ரான்​வென் வில்​லி​யம்ஸ் அபார​மாகத் தடுத்​தார். 45+2-வது நிமிடத்​தில் தென் ஆப்​பிரிக்க அணி​யின் வீரர் குலிசோ முடாவ், ரிச்சி லாரி​யாவை ஃபவுல் செய்​த​தாக கனடாவுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்​கப்​பட்​டது. ஆனால் விஏஆர் தொழில்​நுட்​பத்​தின் மூலம் அந்த முடிவு ரத்து செய்​யப்​பட்​டது. முதல் பாதி​யில் கனடா​வின் இடை​வி​டாத தாக்​குதல்​களைச் சமாளித்த தென் ஆப்​பிரிக்க அணி ஆட்​டத்தை 0-0 என சமநிலை​யில் வைத்​திருந்​தது. முதல் பாதி​யில் ஆதிக்​கம் செலுத்​தி​யும் வாய்ப்​பு​களை கோல்​களாக மாற்ற முடி​யாத​தால் கனடா ஏமாற்​றமடைந்​தது. 2-வது பாதி​யிலும் இதே நிலை​தான் நீடித்​தது. கனடா தொடர்ந்து ஆதிக்​கம் செலுத்​தி, அழுத்​தத்தை அதி​கரித்​தது. 66-வது நிமிடத்​தில் அந்த அணிக்கு கோல் அடிக்க மீண்​டும் வாய்ப்பு கிடைத்​தது.