Home செய்திகள் தேசிய செய்திகள் மணமகனிடம் ரூ.1 கோடி வாங்கி காதலனுக்கு கொடுத்த சியா கோயல்

மணமகனிடம் ரூ.1 கோடி வாங்கி காதலனுக்கு கொடுத்த சியா கோயல்

புனே, ஜூன் 30- வருங்​கால கணவர் கேத்​தனிடம் ரூ.1 கோடி வாங்கி காதலன் சேத்​தனுக்கு சியா கோயல் கொடுத்​திருப்​பது போலீஸ் விசா​ரணை​யில் தெரிய வந்​துள்​ளது. மகா​ராஷ்டி​ரா​வின் புனேவை சேர்ந்த ரியல் எஸ்​டேட் அதிபர் கேத்தன் அகர்​வால் (26). இவர் சக்​சஸ் குரூப் என்ற கட்​டு​மான நிறுவனத்தை நடத்தி வரு​கிறார். இவரது குடும்ப சொத்து மதிப்பு ரூ.600 கோடி ஆகும். இவருக்​கும் புனேவை சேர்ந்த சியா கோயலுக்​கும் (20) கடந்த பிப்​ர​வரி 11-ம் தேதி இரு​வீட்​டார் சம்மதத்துடன் திருமண நிச்​சய​தார்த்​தம் நடை​பெற்​றது. வரும் நவம்​பரில் ரூ.17 கோடி செல​வில் உதய்​பூரில் உள்ள அரண்மனையில் பிரம்​மாண்​ட​மாக திரு​மணத்தை நடத்த ஏற்பாடுகள் செய்​யப்​பட்டு இருந்​தன. இதனிடையே கடந்த சில ஆண்​டு​களாக சியா கோயலும் புனேவை சேர்ந்த மளிகை கடைக்​காரர் சேத்​தன் சவுத்​ரி​யும் (22) ரகசி​ய​மாக காதலித்து வந்​துள்​ளனர். வருங்​கால கணவர் கேத்​தனிடம் தனது காதலை மறைத்த சியா, அவரிடம் இயல்​பாக பழகி வந்​துள்​ளார். அதே​நேரம் சியா​வும் சேத்​தனும் சேர்ந்து கேத்​தனை கொலை செய்ய ரகசி​ய​மாக திட்​டம் தீட்டி உள்​ளனர். கடந்த 18-ம் தேதி ராஜஸ்​தானின் மேற்​குதொடர்ச்சி மலை​யில் 3,389 அடி உயரத்​தில் அமைந்​துள்ள லோகா​காட் கோட்​டைக்கு கேத்​தனை அழைத்​துச் சென்ற சியா, மலை உச்​சி​யில் இருந்து அவரை கீழே தள்ளி கொடூர​மாக கொலை செய்​திருக்​கிறார். இந்த வழக்கு குறித்து புனே போலீ​ஸார் கூறிய​தாவது: கடந்த மே 31-ம் தேதி வருங்​கால மனைவி சியாவை லோகா​காட் கோட்​டைக்கு கேத்​தன் அழைத்​துச் சென்​றுள்​ளார். அங்​கேயே கேத்​தனை கொலை செய்ய சதித் திட்​டம் தீட்டி உள்​ளார். இதற்காக பலமுறை ஒத்​திகை பார்த்து உள்​ளனர். கடந்த 19-ம் தேதி சியா​வின் பிறந்த நாள். மகா​ராஷ்டி​ரா​வின் பிரபல சுற்​றுலா தலமான மகாபலீசுவர் நகரில் உள்ள நட்​சத்​திர ஓட்​டலில் அவரின் பிறந்த நாளை கொண்​டாட கேத்​தன் ஏற்​பாடு செய்​திருந்​தார். ஆனால் சியா, வலுக்​கட்​டாய​மாக கேத்​தனை லோகா​காட் கோட்​டைக்கு அழைத்​துச் சென்று உள்​ளார். அங்கு சியா​வும் சேத்​தனும் சேர்ந்து மலை உச்​சி​யில் இருந்து கேத்​தனை தள்ளி கொலை செய்து உள்​ளனர். வருங்​கால கணவர் கால் தவறி 400 அடி பள்​ளத்​தில் விழுந்து விட்​ட​தாக சியா நாடக​மாடி​னார். ஆனால் போலீ​ஸாரின் விசா​ரணை​யில் உண்​மை​கள் வெளிச்​சத்​துக்கு வந்​து​விட்​டன. கோடீஸ்​வர​ரான கேத்​தனிடம் இருந்து சியா அவ்​வப்​போது பெரும் தொகையை பெற்று வந்​துள்​ளார். குறிப்​பாக திரு​மணத்​துக்கு நகைகள், ஆடைகள் வாங்க வேண்​டும். இதற்கு ரூ.1 கோடி தேவைப்​படு​கிறது என்று இந்த மாத தொடக்​கத்​தில் கேத்​தனிடம் சியா கேட்​டுள்​ளார்.