Home செய்திகள் தேசிய செய்திகள் காணிக்கை திருட்டு – விசாரணை தீவிரம்

காணிக்கை திருட்டு – விசாரணை தீவிரம்

புதுடெல்லி: ஜூன் 30-
அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருடப்பட்டதாக புகார் எழுந்​தது. இது தொடர்​பாக விசா​ரிக்க உத்தர பிரதேச அரசு சிறப்பு விசா​ரணைக் குழுவை (எஸ்​ஐடி) அமைத்​தது.இதன் முதல்​ கட்ட விசா​ரணை​யில் திருட்டு உறுதி செய்​யப்​பட்டு 8 பேர் கைது செய்​யப்​பட்​டதுடன் அவர்​கள் மீது வழக்கு பதிவு செய்யப்​பட்​டுள்​ளது. இதன் இரண்​டாம் கட்ட விசா​ரணை நேற்று தொடங்​கியது. விசா​ரணை​யில் முக்​கிய​மாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்​தியா (எஸ்​பிஐ) கிளை​யின் அதி​காரி​கள் மற்​றும் அலு​வலர்​கள் இடம்​பெற்​றுள்​ளனர்.
ராமர் கோயி​லில் பெறப்​படும் காணிக்​கைகள் தொடர்​பாக, கடந்த பிப்​ர​வரி 2024-ல் எஸ்​பிஐ மற்​றும் ​ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்​கட்​டளை இடையே புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் போடப்​பட்​டது. உண்​டியலில் இருந்து காணிக்​கைகளை எடுப்​பது, அவற்றை எண்​ணுவது மற்​றும் வங்​கி​யில் செலுத்​து​வது ஆகிய பொறுப்​பு​கள் எஸ்​பிஐ-​யிடம் ஒப்​படைக்​கப்​பட்​டன.
தொடக்​கத்​தில், இப்​பணிக்​காக 10 பேர் மட்​டுமே பணியமர்த்தப்பட்​டனர். மாதாந்​திர காணிக்கை வரவு 14 முதல் 15 கோடி ரூபாயாக உயர்ந்​த​தால், எஸ்​பிஐ ஒரு தனி​யார் முகமை மூலம் ஊழியர்​களின் எண்​ணிக்​கையை 40 ஆக உயர்த்​தி​யது. இருப்பினும், அந்த முகமைக்கு ஒப்​பந்​தம் டெண்​டர் மூலம் வழங்கப்​பட்​ட​தாகத் தெரிய​வில்​லை.
அதே சம​யம், அந்த முகமை​யின் பணி​யாளர்​களின் பின்​னணி பற்றி காவல் துறை சரி​ பார்த்​த​தாக​வும் தெரிய​வில்​லை. அவர்களில் பலர் கோயில் பொதுச் செய​லா​ளர் சம்​பத் ராய் மற்றும் டின்னு யாதவ் ஆகியோரின் பரிந்​துரை​யின் பேரில் பணியமர்த்​தப்​பட்​ட​தாகத் தகவல் உள்​ளது. இதனால், கைதான 8ல் 5 பேர் ஒரு​வொருக்கு ஒரு​வர் உறவினர்​கள். எனவே, இது குறித்து எஸ்​ஐடி தீவிர​மாக விசா​ரிக்க உள்​ளது.