Home செய்திகள் தேசிய செய்திகள் மும்பையில் கரை ஒதுங்கிய திமிங்கலம் குட்டி உயிரிழப்பு

மும்பையில் கரை ஒதுங்கிய திமிங்கலம் குட்டி உயிரிழப்பு

மும்பை: ஜூன் 30
மும்​பை​யில் கரை ஒதுங்​கிய திமிங்கலம் குட்டியை மீட்பு குழு​வினர் மீண்​டும் கடலுக்​குள் அனுப்​பும் முயற்​சி​யில் ஈடுபட்டனர். ஆனால் அந்த திமிங்​கலம் குட்டி இறு​தி​யில் இறந்​தது.
மும்​பை​யின் பாந்த்ரா கடலோர பகு​தி​யில் அமைந்​துள்ள கார்​டர் கிளப் அருகே ஒரு திமிங்​கலம் தென்​படு​வதை பாந்த்​ரா-வெர்​சோவா கடல் பாலம் அமைக்​கும் திட்​டத்​தில் ஈடு​பட்​டுள்ள ஊழியர்கள் கடந்த சனிக்​கிழமை பார்த்​தனர். அது பின்​னர் கரை ஒதுங்கிய நிலை​யில் அசைந்து கொண்​டிருந்​தது. அது 26 அடி நீளம் கொண்ட ‘ஹம்ப்​பேக்’ வகை திமிங்​கலம் குட்டி என கண்டறிப்​பட்​டது.
இதையடுத்து வனத்​துறை, மும்பை மாநக​ராட்​சி, தீயணைப்​புத்​துறை அதி​காரி​கள், கால்​நடை மருத்​து​வர்​கள் குழு​வினர் ஆகியோர் விரைந்து வந்து அதை மீண்​டும் கடலுக்​குள் அனுப்​பும் முயற்​சி​யில் இறங்​கினர்.ஆனால் இறு​தி​யில் அந்த திமிங்​கலம் குட்டி​யிடம் எந்த அசை​வும் இல்​லை. அதை வனத்​துறை​யினரும், உள்​ளூர் மீனவர்​களும் பரிசோ​தித்​த​தில் அந்த திமிங்​கலம் குட்டி இறந்​தது உறுதி செய்​யப்​பட்​டது. திமிங்​கலம் குட்​டியை காப்பாற்றும் மீட்பு குழு​வினரின் முயற்சி சோகத்​தில் முடிந்​தது.
ஹம்ப்​பேக் (கூன் முதுகு) வகை திமிங்​கலங்​கள் உலகின் மிகப் பெரிய பாலூட்டி விலங்​கினம். இவற்​றில் நன்கு வளர்ந்த திமிங்கலம் 50 அடி முதல் 60 அடி நீளம் இருக்​கும்.
இந்த வகை திமிங்​கலம் மும்பை கடல் பகு​தி​யில் தென்​படு​வது மிக​வும் அரிது. இவை இடம்​பெயரும் போது அரபிக் கடல் வழி​யாக செல்​லும் என கடல் ஆராய்ச்சி நிபுணர்​கள் தெரி​வித்​துள்​னர். கூட்​ட​மாக இடம் பெயரும்​போது தாயை​விட்டு பிரிந்த திமிங்​கலம் குட்டி உடல் நலம் பாதிக்​கப்​பட்​டோ, காயம் அடைந்தோ அல்​லது கடல் கொந்​தளிப்​பு ​காரண​மாக ​பாதை ​மாறி கரை ஒதுங்​கி​யிருக்​கலாம்​ என கூறப்படு​கிறது.