
டெஹ்ரான், ஜூலை 1- ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28 ம் தேதி கொல்லப்பட்டார். அவரது இறுதி சடங்கு வரும் 4ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது. அழைப்பு விடுக்கப்பட்டும் பிரதமர் மோடி இதில் பங்கேற்காத நிலையில் நம் நாட்டின் சார்பில் 2 பேரை அனுப்பி வைக்க உள்ளார். ஆனால் அவர்களின் ரேங்க் மிகக்குறைந்த அளவில் உள்ளது.
இதனால் ஈரானை மொத்தமாக கைவிட பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி மாதம் 28 ம் தேதி போரை தொடங்கியது. போரின் முதல் நாளிலேயே ஈரானின் உச்சபட்ச தலைவராக இருக்கும் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அதன்பிறகு தொடர்ந்து போர் நடந்து வந்தது. தற்போது போர் நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையே மேற்கொள்ளப்பட்ட தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் போர் நின்றுள்ளது. இதனால் வரும் 4ம் தேதி முதல் ஜுலை 9 ம் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட உள்ளது. இதில் ஈரான் தனது நட்பு நாடுகளின் தலைவர்களை பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி அயதுல்லா அலி கமேனியின் இறுதி சடங்கில் பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும் என்று ஈரான் விரும்புகிறார்.
ஈரான் பிரதமர் மசூத் பெசெஷ்கியான், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தார். ஆனால் பிரதமர் மோடி பங்கேற்கபோவது இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. மோடிக்கு பதிலாக இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை இணையமைசசர் பவித்ரா மார்கெரிட்டா மற்றும் பீகார் ஆளுநர் சையத் அட்டா ஹஸ்னைன் ஆகியோர் அனுப்பி வைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் இந்தியாவின் இந்த செயல் தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது. ஏனென்றால் இதற்கு முன்பு ஈரானின் முதல் உச்சபட்ச தலைவர் அயதுல்லா ரூகொல்லா கோமேனி கடந்த 1989 ம் ஆண்டில் காலமானார். அப்போது அவரது இறுதி சடங்கில் நம் நாட்டில் இருந்து அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் பிவி நரசிம்ம ராவ் சென்று பங்கேற்றார். பிறகு கடந்த 2024ம் ஆண்டில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். அவரது இறுதி சடங்கில் நம் நாட்டின் அப்போதைய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்றார். இப்போது அயதுல்லா அலி கமேனி 37 ஆண்டுகளாக ஈரானின் உச்சபட்ச தலைவராக இருந்து மறைந்த நிலையில் பிரதமர் மோடிக்கு அழைப்பு வந்தும் அவர் செல்லவில்லை. மாறாக மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் பவித்ரா மார்கெரிட்டா மறஅறம் பீகார் ஆளுநர் சையத் அட்டா ஹஸ்னைன் ஆகியோரை அனுப்புகிறது. இவர்கள் 2 பேரின் அந்தஸ்து என்பது துணை ஜனாதிபதி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரை விட குறைவாகும்.





















