Home செய்திகள் தேசிய செய்திகள் அலுமினியம் மெகா திட்டத்தை தொடங்கும் அதானி

அலுமினியம் மெகா திட்டத்தை தொடங்கும் அதானி

இந்தூர், ஜூலை 3- அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் மற்றும் அபுதாபியைச் சேர்ந்த IRH நிறுவனம் ஆகியவை இணைந்து, ஒடிசாவில் சுமார் 11.5 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 1.08 லட்சம் கோடி) மதிப்பிலான ஒருங்கிணைந்த அலுமினிய திட்டத்தை உருவாக்க ஒடிசா அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த மாபெரும் திட்டம் 50:50 என்ற விகிதத்திலான கூட்டு முயற்சியின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது. இது ஒடிசா மாநிலத்தின் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீடாகவும், இந்தியாவின் உலோகத் துறையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிக முக்கிய வெளிநாட்டு முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. திட்டத்தின் சிறப்பம்சங்கள் இந்த பிரம்மாண்டமான கிரீன் எனர்ஜி திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு 4 மில்லியன் மெட்ரிக் டன் திறன் கொண்ட அலுமினா சுத்திகரிப்பு ஆலை, 2 மில்லியன் மெட்ரிக் டன் திறன் கொண்ட அலுமினியம் உருக்காலை, 4,000 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் மற்றும் 1 மில்லியன் மெட்ரிக் டன் திறன் கொண்ட உற்பத்தி பூங்கா ஆகியவை அமைக்கப்பட உள்ளன. இந்த ஒருங்கிணைந்த திட்டம் இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் முதல் கட்டத்தில் சுமார் ரூ. 66,000 கோடியும், இரண்டாம் கட்டத்தில் சுமார் ரூ. 44,000 கோடியும் முதலீடு செய்யப்பட உள்ளது.