Home செய்திகள் தேசிய செய்திகள் டெல்லியின் புதிய மின் வாகனக் கொள்கை: சலுகை முதல் சவால்கள் வரை

டெல்லியின் புதிய மின் வாகனக் கொள்கை: சலுகை முதல் சவால்கள் வரை

டெல்லி, ஜூலை 3- டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், அங்கு ஆளும் பாஜக அரசு புதிய மின் வாகனக் கொள்கையை அறிவித்துள்ளது. இதன்படி டெல்லியில் பெட்ரோல், சிஎன்ஜி வாயுவால் இயங்கும் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், வாகனங்கள் படிப்படியாக பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட இருக்கிறது.உலகிலேயே காற்று மாசு அதிகமுள்ள நாடுகள் குறித்து சுவிட்சர்லாந்தின் ஐகியூ ஏர் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பட்டியல் வெளியிட்டது. அதில், காற்று தரம் மோசமாக இருக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 6-வது இடத்திலும், நகரங்களில் உத்தரப் பிரதேசத்தில் லோணி நகரம் முதலிடத்திலும் இருக்கிறது. டெல்லி 4-வது இடத்தில் இருக்கிறது. பல ஆண்டுகளாகவே டெல்லியின் காற்றுத் தரம் மோசமடைந்து வருகிறது. டெல்லியை ஆண்ட காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக அரசுகள் காற்றின் தரத்தை உயர்த்த பல முயற்சிகள் மேற்கொண்டபோதிலும் அது வெற்றி தரவில்லை. அதிலும் குளிர் காலமான நவம்பர் முதல் ஜனவரி வரையிலான மாதங்களில் டெல்லியில் காற்று மாசு உச்சக் கட்டத்துக்கு சென்றுவிடும். மனிதர்கள் சுவாசிக்க முடியாத நிலைக்கு சில நேரங்களில் காற்று மாசு வந்ததையடுத்து பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டு, முதியோர், நோயாளிகள், பாதுகாப்பாக வைக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன.அதிகமான வாகனங்கள், ஹரியானா, பஞ்சாப் மாநில விவசாய நிலங்களில் இருந்து எரிக்கப்படும் புகை, தொழிற்சாலையில் இருந்து வெளியேறிவும் புகை ஆகியவற்றால் டெல்லியின் காற்று தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.புதிய மின் வாகனக் கொள்கை இதையடுத்து, டெல்லியில் ஆட்சியில் உள்ள பாஜக தலைமையிலான அரசு, டெல்லியின் காற்றின் தரத்தை மீட்டெடுக்கும் வகையில் புதிய மின் வாகனக் கொள்கையை ஜூன் மாதம் அறிவித்து, ஜூலை 1-ம் தேதி முதல் அதை நடைமுறைக்கு வருவதாக முதல்வர் ரேகா குப்தா அறிவித்தார். டெல்லியில் காற்றின் தரத்தை மேம்படுத்தும் வகையில் ‘மின் வாகனக் கொள்கை-2.0’ வெளியிடப்பட்டுள்ளது. இந்த கொள்கை 2026, ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்து, 2030-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும். இதன் நோக்கம், டெல்லியை மின்வாகனங்கள் உள்ள நகராக மாற்றி, காற்று மாசைக் குறைக்க வேண்டும். பெட்ரோல், சிஎன்ஜி வாயுவில் ஓடும் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், சரக்கு போக்குவரத்து வாகனங்கள், பள்ளிப் பேருந்துகள், அரசு போக்குவரத்து பேருந்துகளை மின் வாகனமாக மாற்றுவதாகும்.