Home செய்திகள் தேசிய செய்திகள் ரூ.35,000 கோடியில் கார் தொழிற்சாலை

ரூ.35,000 கோடியில் கார் தொழிற்சாலை

புதுடெல்லி: ஜூலை 3-
ஹரி​யானா மாநிலம் கார்​கோ​டா​வில் ரூ.35,000 கோடி முதலீட்​டில் புதிய கார் தொழிற்​சாலையை பிரதமர் மோடி​யும், ஜப்​பான் பிரதமர் சனே டகாய்ச்​சி​யும் நேற்று தொடங்கி வைத்​தனர். பாது​காப்பு, வர்த்​தகம் தொடர்​பாக இரு நாடுகள் இடையே பல்​வேறு முக்​கிய ஒப்​பந்​தங்​களும் கையெழுத்​தாகின.
இந்​தியா – ஜப்​பான் வரு​டாந்​திர மாநாடு டெல்​லி​யில் நேற்று தொடங்​கியது. இதில் பங்​கேற்க ஜப்​பான் பிரதமர் சனே டகாய்ச்சி 3 நாள் அரசு​முறைப் பயண​மாக நேற்று டெல்​லிக்கு வந்​தார். குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் அவருக்கு சிவப்​புக் கம்பள வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. பின்​னர் டெல்​லி​யில் உள்ள ஹைத​ரா​பாத் இல்​லத்​தில் பிரதமர் மோடி​யும், ஜப்​பான் பிரதமர் சனே டகாய்ச்​சி​யும் அதி​காரப்​பூர்​வ​மாக சந்​தித்​துப் பேசினர். பின்​னர் செய்​தி​யாளர்​களை சந்​தித்​தனர். அவர்​கள் கூறிய​தாவது:
பிரதமர் மோடி: இந்​தி​யா​வின் ஆட்டோ மொபைல், மின்​னணு துறை வளர்ச்​சிக்கு ஜப்​பான் முக்​கிய பங்​களிப்​பு​களை வழங்கி உள்​ளது. தற்​போது ஏஐ (செயற்கை நுண்​ணறி​வு) தொழில்​நுட்​பத்​தில் இரு நாடு​களும் இணைந்து பணி​யாற்றி வரு​கின்​றன. பாது​காப்பு தொடர்​பாக முக்​கிய ஒப்​பந்தம் கையெழுத்​தாகி உள்​ளது. இதுதவிர, மருந்து உற்​பத்​தி, மருத்​துவ உபகரணங்​கள், உயிரி தொழில்​நுட்​பம், நிதிச் சேவை தொடர்​பாக​வும் முக்​கிய ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகி உள்​ளன.
இந்​தி​யா- ஜப்​பான் பயோ காஸ் திட்​டத்​தின்​கீழ் நாடு முழு​வதும் புதி​தாக 1,000 பயோ காஸ், இயற்கை உரத் தொழிற்​சாலைகள் கட்​டப்​படும்.
இதன்​மூலம் இந்​திய கிராமங்​கள் வளர்ச்சி அடை​யும். இந்தி​யா​வில் கச்சா எண்​ணெய் கையிருப்பை அதி​கரிக்​கத் தேவையான தொழில்​நுட்ப உதவி​களை வழங்க ஜப்​பான் முன்​வந்​துள்​ளது. பேட்​டரி, பசுமை ஹைட்​ரஜன், அணுசக்தி, கப்​பல் கட்​டு​மானம், விமான போக்​கு​வரத்​து, சரக்கு போக்​கு​வரத்து உள்​ளிட்ட துறை​களில் இரு நாடு​கள் இணைந்து பணி​யாற்​றும்.
ஜப்​பான் பிரதமர் டகாய்ச்சி: இந்​தி​யா​வின் பெட்​ரோலிய கையிருப்பை அதி​கரிக்க தேவை​யான தொழில்​நுட்ப உதவி​களை ஜப்​பான் வழங்​கும். எரிசக்​தி, அரிய​வகை கனிமங்​கள் தேவையைப் பூர்த்தி செய்ய இரு நாடு​களும் ஒன்​றிணைந்து செயல்​படும். ஜப்​பான் – இந்​திய கடற்​படைகள் இணைந்து விரை​வில் போர்ப் பயிற்​சிகளில் ஈடு​படும். இரு நாடு​களும் இணைந்து ஆயுதங்​களை உற்​பத்தி செய்​யும். இவ்​வாறு அவர்​கள் பேசினர்.