Home செய்திகள் தேசிய செய்திகள் அயோத்தி நன்கொடை விவகாரம்: விசாரணைக்கு வி.எச்.பி., வலியுறுத்தல்

அயோத்தி நன்கொடை விவகாரம்: விசாரணைக்கு வி.எச்.பி., வலியுறுத்தல்

புதுடில்லி: ஜூலை 6-
‘ராமர் கோவில் காணிக்கை திருட்டு விவகாரத்தில், எதிர்க்கட்சி தலைவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கிறதா என்பதை போலீசார் விசாரிக்க வேண்டும்’ என, வி.எச்.பி., எனப்படும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவர் அலோக் குமார் வலியுறுத்தி உள்ளார்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள பிரசித்தி பெற்ற அயோத்தி ராமர் கோவிலில் இருந்து காணிக்கை பணம் திருடப்பட்ட விவகாரம், நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு, எட்டு பேரை கைது செய்துள்ளது. இந்த விவகாரம் குறித்து, எதிர்க்கட்சி தலைவர்கள் பலவிதமான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.
‘கோ வில் கா ணிக்கை பணத்தில் இருந்து லட்சக்கணக்கில் திருடப்பட்டுள்ளது. கடைநிலை ஊழி யர்கள் மட்டும் இதை செய்திருக்க முடியாது. இதன் பின்னணியில் செல்வாக்குமிக்க நபர்கள் இருக்கலாம்’ என, காங்கிரஸ் லோக்சபா எம்.பி., பிரியங்கா சமீபத்தில் தெரிவித்தார்.
டில்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலும், ‘200 கோடி ரூபாய், விலை உயர்ந்த தங்கம், வெள்ளி பொருட்கள் திருடப் பட்டுள்ளன. உ.பி., போலீஸ், அமலாக்கத்துறை, சி.பி.ஐ., இந்த விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன்’ என கேள்வி எழுப்பி னார்.
இந்நிலையில், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவர் அலோக் குமார், அயோத்தி டி.எஸ்.பி., அசுதோஷ் திவாரிக்கு எழுதியுள்ள கடிதம்:
ராமர் கோவில் நன்கொடை முறைகேடு குறித்து பிரியங்கா, அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சியின் ராம் கோபால் யாதவ் உள்ளிட்டோர் பொது வெளியில் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர்.