
நியூயார்க், ஜூலை 7- திமுக எம்பி டி.ஆர்.பாலுவுடன் நான் சமரசம் செய்து கொண்டேனா? அவதூறு வழக்கை அவர் வாபஸ் பெற்ற விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து வி தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வி தி லீடர்ஸ் அமைப்பின் அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது: திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு நீதிமன்றத்திற்கு வந்தார். நீதிபதியையும் என்னையும் பார்த்தார்.
பிறகு அவர் இதுவரைக்கும் 8 பேர் மீது அவதூறு வழக்கு போட்டிருக்கிறேன். 6 பேரிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கியிருக்கிறேன். ஒரு தனியார் பத்திரிகையிடம் ரூ 25 லட்சம் நஷ்ட ஈடு வாங்கியிருக்கிறேன். இது எட்டாவது கேஸ், இதுவரைக்கும் நான் போட்ட எந்த அவதூறு வழக்கிலும் தோற்றதில்லை என்றார்.
மேலும் “எனக்கு 82 வயதாகிறது. நான் 50 ஆண்டுகளாக ஒரே அரசியல் கட்சியில் பயணித்து வருகிறேன். அந்த அரசியல் கட்சியின் பொருளாளராக 35, 40 ஆண்டுகளாக இருந்து வருகிறேன்” என்றார். பிறகு படிப்படியாக குறுக்கு விசாரணை வரை சென்றுவிட்டது.
அந்த நபரே கோர்ட்டுக்கு வந்து இந்த வழக்கை வாபஸ் வாங்குவதாக சொல்லியிருக்கிறார். அவர் வாபஸ் வாங்கியதால் அண்ணாமலை சமரசம் செய்து விட்டாரா என்கிறார்கள். அப்போதுதான் நான் மீடியா நண்பர்களுக்கு ஒரு விஷயத்தை சொல்ல நினைத்தேன். யாரோ ஒருவர் என் மீது வழக்குப் பதிவு செய்தார்.




















