Home செய்திகள் உலக செய்திகள் மைக்ரோசாஃப்ட்: ஒரே நாளில் 4,800 ஊழியர்கள் பணிநீக்கம்

மைக்ரோசாஃப்ட்: ஒரே நாளில் 4,800 ஊழியர்கள் பணிநீக்கம்

உலகின் முன்னணி டெக் நிறுவனமான மைக்ரோசாஃப்ட், தனது கேமிங் பிரிவான ‘எக்ஸ்பாக்ஸ்’ (Xbox) நிறுவனத்தில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறி 4,800 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெக் நிறுவனங்கள் கடந்த 2 ஆண்டுகளாகவே பல காரணங்களை கூறி தொடர்ச்சியாக ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையை எடுத்து வருகின்றன.
ஏஐ பயன்பாடு அதிகரிப்பு, நிறுவன சீரமைப்பு , சிக்கன நடவடிக்கை உள்ளிட்டவற்றை தான் பெரும்பாலான நிறுவனங்கள் காரணமாக முன் வைக்கின்றன. அந்த வகையில் மைக்ரோசாஃப்ட் நிறுவன மறுசீரமைப்பு என்ற பெயரில் எக்ஸ்பாக்ஸ் பிரிவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், நிறுவனத்தின்
செலவுகளை குறைக்கவும், செயல்பாடுகளை மேம்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, கேமிங் துறையில் மைக்ரோசாஃப்ட் செய்த முதலீடுகளுக்கு ஏற்ற வருவாய் கிடைக்கவில்லை. இதுவே நிறுவன மறுசீரமைப்புக்கு காரணம். மைக்ரோசாஃப்ட் தனது மொத்த பணியாளர்களில் சுமார் 2.1% பேரை அதாவது 4,800 பேரை பணிநீக்கம் செய்துள்ளது. இதில் எக்ஸ்பாக்ஸ் பிரிவில் மட்டும் 3,200 ஊழியர்கள் வேலையை இழந்துள்ளனர். எக்ஸ்பாக்ஸ் பிரிவின் புதிய தலைவரான ஆஷா சர்மா, இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் 2027 நிதியாண்டு வரை தொடரும் என தெரிவித்துள்ளார்.