Home செய்திகள் தேசிய செய்திகள் மோடி மன்னிப்பு கேட்க ராகுல் வலியுறுத்தல்

மோடி மன்னிப்பு கேட்க ராகுல் வலியுறுத்தல்

டெல்லி, ஜூலை 23- நீட் தேர்வு வினாத்​தாள் மோசடி விவ​காரத்​தில் போராட்​டம் நடத்​திய மாணவர்​கள் மீது தடியடி நடத்​திய விஷயத்தில் பிரதமர் மோடி மன்​னிப்பு கோர வேண்​டும் என்று மக்களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வு வினாத்​தாள் கசிவு தொடர்​பான விவ​காரத்​தில் மாணவர்​கள் கடந்த திங்​கள்​ கிழமை டெல்​லி​யில் போராட்​டம் நடத்​தினர். அவர்​கள் மீது பாது​காப்​புப் படை​யினர், போலீ​ஸார் தடியடி நடத்தி விரட்​டினர். இதைக் கண்​டித்து நேற்று முன்​தினம் நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்ட ராகுல் காந்தி உள்ளிட்டோர் கைது செய்​யப்​பட்டு பின்​னர் விடுவிக்​கப்​பட்​டனர்.
இந்​நிலை​யில் டெல்லி காங்​கிரஸ் கட்​சித் தலை​மையகத்​தில் நடைபெற்ற செய்​தி​யாளர்​கள் சந்​திப்​பில் ராகுல் காந்தி கூறியதாவது: நீட் தேர்வு வினாத்​தாள் கசிவு விவ​காரம் தொடர்பாக மாணவர்​கள் அமை​தி​யான வழி​யில் போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர். ஆனால் அவர்​கள் மீது தடியடி நடத்தப்பட்டது. நமது நாட்​டில், கல்வி முறை கடந்த 10 ஆண்டுகளில் சீரழிந்து விட்​டது. கடந்த 10 ஆண்​டு​களில் பல்​வேறு தேர்​வு​களில் 152 முறை வினாத்​தாள் கசிந்​துள்​ளன. இதில் சம்பந்தப்​பட்ட குற்​ற​வாளி​கள் யாரும் இது​வரை கைது செய்யப்பட​வில்​லை. அவர்​கள் தண்​டிக்​கப்​பட​வும் இல்​லை. தேர்​வு​களில் நடை​பெறும் மோசடிகளால் இளைஞர்​கள் எதிர்காலத்​தைத் தொலைக்​கின்​றனர். நீட் தேர்வு காரண​மாக ஓராண்​டுக்கு 1.32 லட்​சம் கோடி புழங்​கு​கிறது. வினாத்​தாள் கசிவு காரண​மாக மறு தேர்வு எழுதும் மாணவர்​கள் மன அழுத்​தத்​துக்கு உள்​ளாகின்​றனர் மாணவர்​களின் முக்​கிய 3 கோரிக்​கைகளை ஏற்​றால் போராட்​டம் முடிவுக்கு வரும். முதலா​வ​தாக மத்​திய கல்வி அமைச்​ச​ராக தோல்வி அடைந்​தவரும், ஊழல்​வாதி என அறியப்​பட்​ட​வரு​மான தர்​மேந்​திர பிர​தானை பதவி நீக்​கம் செய்ய வேண்​டும். இரண்டாவ​தாக மாணவர்​கள் மீது கை நீட்​டிய ஒவ்​வொரு நபரும் (போலீஸார்) பொறுப்​பேற்க வைக்​கப்பட வேண்​டும். 3-வ​தாக இதற்​கெல்​லாம் பொறுப்​பேற்க வேண்​டிய​வர் (பிரதமர் மோடி), மாணவர்​களிடம் மன்​னிப்​புக் கேட்க வேண்​டும்.