Home மாவட்டங்கள் பெங்களூர் சௌகார் ஜானகி மருத்துவமனையில் அனுமதி – தீவிர சிகிச்சை

சௌகார் ஜானகி மருத்துவமனையில் அனுமதி – தீவிர சிகிச்சை

சென்னை: ஆக. 20-
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சௌகார் ஜானகி, உடல்நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 94 வயதான சௌகார் ஜானகி சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட மொழிகளில் நடித்துள்ள சௌகார் ஜானகி, வயது முதிர்வு காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
இவருக்கு நேற்று இரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஐசியூவில் சௌகார் ஜானகி அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. அவரது உடல் நிலை தற்போது எப்படி உள்ளது என்பது மருத்துவமனை தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகவில்லை. சௌகார் ஜானகியின் சொந்த ஊர் ஆந்திர மாநிலத்தில் உள்ள ராஜமுந்திரி ஆகும். செயற்கை சுவாச உதவியுடன் சவுகார் ஜானகிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 1960-களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மிகவும் பிசியான நடிகைகளில் ஒருவராக சவுகார் ஜானாகி வலம் வந்தார். 4 முதல்வருடன் சினிமாவில் பயணித்தவர் 73 வருடங்களாக திரையில் ஜொலித்த சவுகார் ஜானகி, 4 முதல்வர்களுடன் சினிமாவில் சம காலத்தில் பயணித்தவர். ஆந்திர முதல்வராக இருந்த என்.டி ராமராவ், தமிழக முதல்வர்களாக இருந்த எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருடன் திரைத்துறையில் பயணித்துள்ளார். சவுகார் ஜானகிக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கியது. உடல் நல பாதிப்பால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ள சவுகார் ஜானகி நலம் பெற வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.