Home செய்திகள் தேசிய செய்திகள் எதிர்க்கட்சிகளை மாவோயிஸ்ட்கள் என பிரதமர் குறிப்பிடவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்

எதிர்க்கட்சிகளை மாவோயிஸ்ட்கள் என பிரதமர் குறிப்பிடவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்

புதுடெல்லி, ஆக. 17- பிரதமர் நரேந்​திர மோடி எதிர்க்​கட்​சித் தலைவர்களை மாவோ​யிஸ்ட் மனப்​பான்மை கொண்​ட​வர்​கள் என்று குறிப்பிட​வில்லை என மத்​திய அமைச்​சர் கிரண் ரிஜிஜு தெரி​வித்​துள்​ளார். டெல்​லி​யில் நடை​பெற்ற 80-வது சுதந்​திர தின விழா​வில் உரையாற்​றிய பிரதமர் நரேந்​திர மோடி, ஆயிரக்​கணக்​கான பாதுகாப்​புப் படை​யினரின் தியாகத்தை நினை​வு​கூர்ந்​தார். அத்துடன் மாவோ​யிஸ்​ட்​களை வெற்​றிகர​மாக ஒழித்​ததற்​காக அவர்​களுக்கு வாழ்த்து தெரி​வித்​தார். ஆயுதம் ஏந்​திய நக்​சலைட்களை ஒழித்​து​விட்​டாலும், பொது வாழ்விலும், அரசு குழுக்​களி​லும் ஊடுருவி வன்​முறைக்கு வாய்ப்புத் தேடும் ‘தி​மாகி நக்​சல்​களை’ (சிந்​தனை நக்​சல்​கள்) அடை​யாளம் கண்டு தனிமைப்​படுத்த வேண்​டும் என்​றும் பிரதமர் மோடி பேசி​னார்.பிரதமரின் இந்​தக் கருத்​துக்கு எதிர்க்​கட்​சி்கள்் கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளன. எக்ஸ் தளத்​தில் காங்​கிரஸ் மூத்த தலை​வர் ப.சிதம்​பரம், “நான் ஒரு ‘தி​மாகி நக்​சல்’ என்​ப​தில் பெருமையடைகிறேன்” என்று பதிலடி கொடுத்​துள்​ளார். மாவோ​யிஸ்ட்​களை ஆதரிப்​பவர்​கள், இந்​திய அரசி​யல மைப்பை நிராகரிப்​பவர்​கள், பிரி​வினை​வாதத்தை ஆதரிப்​பவர்​கள் மற்​றும் அரசி​யல் சாசனப் பிரிவு 370-ஐ ஆதரிப்​பவர்​களை மட்டுமே ‘திமாகி நக்​சல்​கள்’ (நகர்ப்​புற நக்​சல்​கள்) என்ற வார்த்தை குறிக்கும் என்று மத்​திய அமைச்​சர் கிரண் ரிஜிஜு விளக்கமளித்துள்​ளார். மேற்கு வங்​கத்​தில் உள்ள 22 கி.மீ அகலமுள்ள ‘சிக்​கன்ஸ் நெக்’ (கோழிக் கழுத்​து) நிலப்​பகு​தி​யைத் துண்​டித்​து, வடகிழக்கு மாநிலங்​களை இந்​தி​யா​விலிருந்து தனிமைப்​படுத்​தப் பார்ப்​பவர்​களை​யும் இச்​சொல் குறிக்​கும் என அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.