
உடுப்பி: ஆக. 20-
உடுப்பியில் இருந்து சாகரா நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்றில் திடீரென தீப்பிடித்ததில், பஸ்சில் இருந்த 7 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் பிரம்மாவரா அருகே நடந்துள்ளது.
உடுப்பியில் இருந்து சாகராவுக்கு சென்று கொண்டிருந்த அந்த தனியார் பஸ்சில் திடீரென புகையெழும்பியது. அடுத்த சில வினாடிகளில் பஸ்சின் எலக்ட்ரிக்கல் பாக்ஸ் பகுதியில் தீப்பிடித்து, வாகனம் முழுவதும் வேகமாகப் பரவத் தொடங்கியது.
நிலையின் தீவிரத்தை உணர்ந்த பஸ் நடத்துநர், உடனடியாகச் செயல்பட்டு பஸ்சை நிறுத்தி, அதில் இருந்த பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக கீழே இறக்கினார். நடத்துநரின் இந்த சுதாகரிப்பான நடவடிக்கையால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உடுப்பி தீயணைப்பு படை வீரர்கள், தீவிரமாகப் போராடி தீயைக் கட்டுப்படுத்தி முழுமையாக அணைத்தனர்.













