Home மாவட்டங்கள் பெங்களூர் விபத்து: 3 பேர் பலிகுழந்தை உள்பட 3 பேர் படுகாயம்

விபத்து: 3 பேர் பலிகுழந்தை உள்பட 3 பேர் படுகாயம்

ஹாவேரி: ஆக. 20-
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ராணேபன்னூர் தாலுகா சளகேரி சுங்கச்சாவடி அருகே, வீதி ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று பயங்கரமாக மோதியது.
இந்த கொடூர விபத்தில் காரில் பயணம்பண்ணிய தாவணகெரே நிடவள்ளி மௌனேஷ்வரா நகரைச் சேர்ந்த சித்தார்த் (27), ஹசன்முகி (29) மற்றும் யசோதா பாய் (51) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், காரில் இருந்த சவுந்தர்யா (26), சிந்து (24) மற்றும் ஒரு வயது குழந்தையான கஷ்வஸ்ரீ ஆகிய 3 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, தாவணகெரேயில் உள்ள எஸ்.எஸ். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராணேபன்னூரில் இருந்து தாவணகெரே நோக்கிச் சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த ராணேபன்னூர் ஊரகக் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி, வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.