Home மாவட்டங்கள் பெங்களூர் அதிகாரி வீட்டில் லோக் ஆயுக்தாசோதனை ரூ.12.95 கோடி சொத்து பறிமுதல்

அதிகாரி வீட்டில் லோக் ஆயுக்தாசோதனை ரூ.12.95 கோடி சொத்து பறிமுதல்

பெங்களூரு, ஆக. 20-
சிறப்பு நில கையகப்படுத்தும் அதிகாரி மல்லிகார்ஜுனின் வீடு, அலுவலகம் மற்றும் உறவினர்களின் வீடுகள் உட்பட 11 இடங்களில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனையின் போது மல்லிகார்ஜுனிடம் ரூ.18 கோடியே 32 லட்சம் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் சிக்கின. இதில் ரூ.12 கோடியே 95 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்டவை ஆகும்.
கண்டறியப்பட்ட சொத்துக்களின் பட்டியலில் 2 குடியிருப்பு வீடுகள் மற்றும் 100 ஏக்கர் 5 குண்டா விவசாய நிலங்கள் அடங்கும்.
அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.14 கோடியே 28 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதிகாரிகள் ரூ.2 கோடியே 53 லட்சம் ரொக்கப் பணம், ரூ.3 கோடியே 10 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், ரூ.15 லட்சம் மதிப்புள்ள வாகனங்கள்,
ரூ.1 கோடி வங்கி இருப்பு மற்றும் ரூ.33 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.