
சென்னை: ஆக. 20-
மதிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் சென்னையில் இன்று மண்டல முதலமைச்சர்கள் மாநாடு நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடக மாநில முதலமைச்சர் டி. கே சிவக்குமார் ஆகியோர் அருகருகே அமர்ந்து இருந்தனர். அமித்ஷா அவர்களின் வலது பக்கத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் அமர்ந்து இருந்தார். அவரது பக்கத்தில் கர்நாடக மாநில முதலமைச்சர் டி கே சிவக்குமார் அமர்ந்து இருந்தார். இருவரும் மேடையில் அவ்வப்போது பேசிக் கொண்டனர். தமிழக முதலமைச்சர் விஜய் பேசும் போது கர்நாடக முதலமைச்சர் அதை ஆர்வமுடன் கேட்பதையும் கர்நாடக முதலமைச்சர் பேசும்போது அதை தமிழக முதலமைச்சர் ஆர்வமுடன் கேட்பதையும் காண முடிந்தது. காவேரி நதிநீர் விவகாரம் மற்றும் மேகத்தாட் அணை கட்டும் விவகாரம் தொடர்பாக கர்நாடகம் தமிழ்நாடு இரு மாநிலங்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டு உள்ள நிலையில் இரண்டு மாநில முதல்வர்களும் அருகருகே அமர்ந்து இயல்பாக பேசிக் கொண்டு இருந்தனர்.
முதல்வர்கள் மாநாட்டில் பேசிய கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார், மேகதாது பிரச்சினை பற்றி பேசியுள்ளார். மேகதாதுவில் அணை கட்டினால் இரண்டு மாநிலங்கள் பயன் அடையும் என்று விஜய் முன்பாகவே டிகே சிவக்குமார் பேசியுள்ளார்.

தென் மண்டல மாநில முதல்வர்கள் மாநாடு மாமல்லபுரம் அருகே உள்ள கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்குகிறார். தமிழக முதல்வர் விஜய், கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் விடி சதிஷன் ஆகியோரும் தெலுங்கானா முதல்வர் சார்பில் துணை முதல்வரும், புதுவை சார்பில் துணை நிலை ஆளுநரும் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் விஜய் மற்றும் டிகே சிவக்குமார் அருகருகே அமர்ந்து இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார், மேகதாது அணை விவகாரம் குறித்து பேசியுள்ளார். டிகே சிவக்குமார் கூறும் போது, மேகதாது அணை கட்டினால் வறட்சியான காலங்களில் நீரை சேமித்து பயன்படுத்தலாம். மேகதாது அணை கட்டப்படாததால் உபரி நீர் கடலில் வீணாக கலக்கிறது. மேகதாது அணை கட்டி நீரை சேமிப்பதால் தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்கள் பலனடையும். ஆந்திராவின் எதிர்ப்பால் கிருஷ்ணா நீரை கர்நாடாகா முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கிருஷ்ணா நதி நீர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சட்ட போரட்டம் நடைபெற்று வருகிறது” என்று பேசியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் தென் மாநில அமைச்சர் கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தக் கூட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில், 31-வது தென் மாநில அமைச்சர் கூட்டம் சென்னை அடுத்த கோவளம் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தொடங்கியுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி, முதலீடுகளை ஈர்த்தல், கூட்டுறவை வலுப்படுத்துதல், கட்டமைப்பு மேம்பாடு, நீர்வளப் பகிர்வு, கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், நிதிப் பங்கீடு, பேரிடர் மேலாண்மை, குற்றத் தடுப்பு, எல்லைப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன.













