Home மாவட்டங்கள் பெங்களூர் கடைகாரர் மீது தாக்குதல் – கும்பலைக் கலைக்க போலீசார் தடிப்படி

கடைகாரர் மீது தாக்குதல் – கும்பலைக் கலைக்க போலீசார் தடிப்படி

மங்களூரு: ஆக. 23:
ஜெராக்ஸ் எடுக்கும்போது தாள்கள் தற்செயலாக எரிந்துபோன விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், கடை உரிமையாளர் தாக்கப்பட்டதை அடுத்து திரண்ட கும்பலைக் கலைக்க போலீசார் லேசான தடிப்படி நடத்திய சம்பவம் புத்தூர் அருகே தர்பேயில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுள்ளியா மண்டேகோலு பகுதியைச் சேர்ந்த பாத்திமா மற்றும் முபாஷிரா ஆகிய பெண்கள்,
தர்பேயில் உள்ள சுதர்ஷன் பை என்பவருக்குச் சொந்தமான ‘ஜனசேவா ஜெராக்ஸ்’ கடைக்கு சான்றிதழ்களை ஜெராக்ஸ் எடுக்க வந்துள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு ஆவணம் எரிந்து சேதமடைந்தது.
இதனால் சுதர்ஷன் பைக்கும் அப்பெண்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் உருவானது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த ஒரு கும்பல் சுதர்ஷன் பையின் கடைக்குள் புகுந்து அடித்து நொறுக்கியது. சுதர்ஷனை கடைக்கு வெளியே இழுத்து வந்து கொடூரமாகத் தாக்கியதோடு, அதைத் தடுக்க வந்த அவரது மனைவி அஞ்சனா பை மீதும் தாக்குதல் நடத்தியது.
தகவலறிந்து வந்த போலீசார் சூழ்நிலையைக் கட்டுப்படுத்தி, விசாரணைக்காக சுதர்ஷன் பையை போலீஸ் ஜீப்பில் ஏற்றி ஸ்தானத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றனர்.
அப்போது ஆத்திரமடைந்த கும்பல் போலீஸ் வாகனத்தை மறித்து, ஜீப்பிற்குள் புகுந்து சுதர்ஷனை மீண்டும் வெளியே இழுக்க முயன்றது. நிலைமை கைமீறிச் சென்றதால், கும்பலைக் கலைக்க போலீசார் லேசான தடிப்படி (லாட்டி சார்ஜ்) நடத்தினர்.
இச்சம்பவம் குறித்து கடை உரிமையாளர் மற்றும் வாடிக்கையாளர் தரப்பில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதுடன், பணி செய்ய விடாமல் தடுத்த கும்பல் மீதும் தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.