Home மாவட்டங்கள் பெங்களூர் ஆம்ஸ்ட்ராங் கொலை நேரில்பார்த்த சகோதரர் உட்படஇருவரிடம் சிபிஐ விசாரணை

ஆம்ஸ்ட்ராங் கொலை நேரில்பார்த்த சகோதரர் உட்படஇருவரிடம் சிபிஐ விசாரணை

சென்னை: ஆக. 26-
ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்​கில், அவரது மனை​வியை தொடர்ந்​து, சம்​பவத்தை நேரில் பார்த்த சகோ​தரர் வீரமணி உள்​ளிட்ட இரு​வரிடம் சிபிஐ அதிகாரி​கள் தீவிர விசா​ரணை நடத்​தினர்.
பகுஜன் சமாஜ் கட்​சி​யின் முன்​னாள் மாநில தலை​வர் ஆம்​ஸ்ட்​ராங், கடந்த 2024 ஜூலை 5-ம் தேதி, சென்னை பெரம்​பூரில் உள்ள தனது வீட்​டுக்கு அருகே வெட்​டிப் படுகொலை செய்​யப்​பட்​டார். இக்​கொலை தொடர்​பாக செம்​பி​யம் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து பலரை கைது செய்​தனர்.
எனினும், இக்​கொலை​யின் பின்​னணி​யில் உள்ள சதித் திட்​டத்தை முழு​மை​யாக வெளிக்​கொண்​டு​வர, வழக்கு விசா​ரணையை சிபிஐக்கு மாற்ற வேண்​டும் என ஆம்​ஸ்ட்​ராங்​கின் மனைவி பொற்​கொடி மற்​றும் அவரது குடும்​பத்​தினர் முறை​யிட்​டனர்.
இதன்​பேரில் நீதி​மன்​றம் இவ்​வழக்கை சிபிஐ விசா​ரணைக்கு மாற்றி உத்​தர​விட்​டது. நீதி​மன்ற உத்​தர​வைத் தொடர்ந்​து, கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி சிபிஐ புதிய வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை​யைத் தொடங்​கியது.
அதன் தொடர்ச்​சி​யாக, கொலை நிகழ்ந்த இடத்​துக்கு நேரில் சென்ற சிபிஐ அதி​காரி​கள், சம்பவ இடத்தை ஆய்வு செய்து புகைப்​படங்​களை சேகரித்​தனர். விசா​ரணை​யின் அடுத்​தகட்​ட​மாக, ஆம்​ஸ்ட்​ராங்​கின் மனைவி பொற்​கொடி​யிடம் சிபிஐ அதி​காரி​கள் நேற்று முன்​தினம் சுமார் 2 மணி நேரம் விசா​ரணை நடத்​தினர். அப்​போது, வழக்கு தொடர்​பான முக்​கிய ஆவணங்​களை வழங்​கிய பொற்​கொடி, சில யூடியூபர்​கள் இக்​கொலை குறித்து தவறான தகவல்​களைப் பரப்பி வரு​வ​தாக அதி​காரி​களிடம் சுட்​டிக்​காட்​டிய​தாகத் தெரி​கிறது. இதைத் தொடர்ந்​து, ஆம்​ஸ்ட்​ராங் தாக்​கப்​பட்​ட போது அவரை காப்​பாற்ற முயன்று காயமடைந்த அவரது சகோ​தரர் வீரமணி, சம்​பவத்தை நேரில் பார்த்த கீணோஸ் ஆகிய இரு​வரிட​மும் சிபிஐ அதி​காரி​கள் நேற்று தீவிர விசா​ரணை மேற்​கொண்டு அவர்​களின் வாக்​கு மூலத்தை பதிவு செய்​தனர்.