Home செய்திகள் தேசிய செய்திகள் லாரி மீது சொகுசு பஸ் மோதி விபத்து; பயணிகள் 6 பேர் பலியான சோகம்

லாரி மீது சொகுசு பஸ் மோதி விபத்து; பயணிகள் 6 பேர் பலியான சோகம்

ஹைதராபாத்: ஆக. 26-
தெலங்கானா அருகே தனியார் சொகுசு பஸ், இரும்பு ராடுகளை ஏற்றிச் சென்ற லாரி மீது மோதிய விபத்தில் பயணிகள் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஹைதராபாத்தில் இருந்து விஜயவாடா நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பஸ், தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் உள்ள துர்காபுரம் அருகே சென்ற போது, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரும்பு ராடுகளை ஏற்றியிருந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது. அந்த பஸ்ஸில் மொத்தம் 43 பேர் பயணம் செய்த நிலையில், 6 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
காயமடைந்த பயணிகள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், காயமடைந்தவர்களுக்குச் சிறந்த மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதிகாலை 5.20 மணியளவில் நடந்த இந்த விபத்திற்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து அதிகாலை 3 மணி அளவில் நிகழ்ந்துள்ளது. நள்ளிரவு நேரம் , அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர் , தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் . இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.