
புதுடில்லி, ஆக. 26- ‘’ அரசியலும், போரும் பிரிக்க முடியாதவை, ‘’ என முப்படை முன்னாள் தலைமை தளபதி அனில் சவுஹான் கூறினார். ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: அரசியலும், போரும் பிரிக்க முடியாதவை. ஒரு நாட்டின் அரசியல் நலனில் உயர்ந்தது. முதன்மையானது. அதனை பாதுகாக்கும் கருவிகளில் ஒன்று ஆயுதப்படைகள். அதன் நோக்கம் இரு வகைப்பட்டது.முதலில்,தனது நோக்கங்களை அடைவதற்காக ஒரு குறிப்பிட்ட படையை பயன்படுத்துவதற்கு பலவழிகளை அரசுக்கு வழங்குவது. இரண்டாவதுஇது அரசிற்கு ஒரு வித நம்பிக்கையை அளிக்கும்.அமைதி காலத்தில் திறன்களை வளர்த்துக் கொள்வதற்காக நிறைய பணத்தை அரசு செலவு செய்துள்ளதால் தனது விருப்பத்திற்கு ஏற்ப பல வழிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். யூரி பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது. நிலம் வழியாக சென்று தாக்குதல் நடத்தப்பட்டது. பிறகு யூரி தாக்குதலுக்கு பிறகு வான்வெளி வாயிலாக தாக்குதல் நடத்தப்பட்டது.ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, 3வதாக ஒரு வாய்ப்பை பயன்படுத்த எண்ணினோம். அது கீழ் வான் வெளியை பயன்படுத்துவது என முடிவு செய்தோம். இதன் வாயிலாக, வெற்றியை உறுதி செய்ய முடிவதுடன், திடீர் தாக்குதலுக்கான வாய்ப்பாகவும் இருந்து இருக்கும். இவ்வாறு அனில் சவுஹான் பேசினார்.














