
மாஸ்கோ: ஆக. 31:
இந்திய விமானப்படைக்காக ரஷ்யாவிடமிருந்து மேலும் ஐந்து S-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை
வாங்குவதற்கான புதிய ஒப்பந்தத்தை ரஷ்யா முறைப்படி பாதுகாப்பு அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ. 50,000 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த ஏவுகணை அமைப்புகள் மிக முக்கியமானவை என கூறப்படுகிறது.
S-400 அமைப்புகள் எதிரியின் ஏவுகணைகள் மற்றும் விமானங்களை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டவை.இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.













