Home மாவட்டங்கள் பெங்களூர் பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் வீசப்பட்டது

பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் வீசப்பட்டது

சேலம்: ஆக. 31:
அரிசிப்பாளையத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரிசிப்பாளையம் குணபாலன் தெருவில் உள்ள சிவன் கோயிலில் பூசாரியாக பணியாற்றும் ரமேஷ், தன் குடும்பத்துடன் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகிறார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, பிறந்தநாளையொட்டி தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தில் உள்ள கோயில்களுக்குச் சென்றிருந்த ரமேஷ், வீடு திரும்பிய போது தண்ணீர் குழாயைத் திறந்தபோது கடுமையான துர்நாற்றம் வீசியது. சந்தேகமடைந்த அவர், மொட்டை மாடியில் உள்ள சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டியைத் திறந்து பார்த்தபோது, அதில் மூட்டையில் மனிதக் கை, கால்கள் துண்டு துண்டாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாகப் பள்ளப்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அங்குள்ள இரண்டு தண்ணீர் தொட்டிகளிலும் இரண்டு மூட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. ஒரு மூட்டையில் கை, கால் உட்பட உடல் பாகங்களும், மற்றொரு மூட்டையில் தலைப்பகுதியும் இருந்தன. இக்கொலைக்குப் பொறுப்பானவர்களை கண்டறிய போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.