
ஜகார்த்தா: செப். 7-
எரிமலை வெடிப்பால் சிங்கப்பூர், ஹாங்காங், சிட்னி, ஆம்ஸ்டர்டாம், சியோல், தோகா, கோலாலம்பூர் உள்ளிட்ட சர்வதேச நகரங்களுக்கு மற்றும் பாலி, சுரபாயா உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கு செல்லும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சில விமானங்கள் மாற்று நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. பயணிகள் விமான நிலையங்களில் தங்களின் பணத்தைத் திரும்பப் பெறவும், உடமைகளை மீட்கவும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். செயற்கைக் கோள் படங்களில் இரண்டு பெரிய சாம்பல் மேகங்கள் கண்டறியப்பட்டன.இதில், ஒரு சாம்பல் மேகம் சுமார் 20,000 அடி உயரத்திற்கு எழும்பி, ஜகார்த்தா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பாதித்துள்ளது. மற்றொரு சாம்பல் மேகம் சுமார் 50,000 அடி உயரத்திற்கு மேல் எழும்பி, சுண்டா ஜலசந்தி மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளுக்கு மேல் பரவி வருகிறது.
இந்த எரிமலை வெடிப்பின் காரணமாக விமான சேவைகள் மட்டுமின்றி, சுற்றுப்புற பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும், இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய அதிகாரிகள் துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.













