Home செய்திகள் உலக செய்திகள் ஈரான் கப்பல் மீதான தாக்குதல்

ஈரான் கப்பல் மீதான தாக்குதல்

டெஹ்ரான்: செப். 7-
ஈரான் எண்ணெய் கப்பல்களுக்கு அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 30 முதல் இரு நாடுகளும் போராட்ட நிலைக்கு சென்றுள்ளன. அமெரிக்கா, ஈரானின் கார்க் தீவு மீது ஏவுகணைகளை ஏவியது. இதற்கு பதிலாக ஈரான், அமெரிக்க போர்க்கப்பல்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த ஏவுகணைகள் நடுவானில் அழிக்கப்பட்டன.
அமெரிக்க ராணுவம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற 3 ஈரானிய எண்ணெய் கப்பல்களை தாக்கியது. இதில் மூன்று கப்பல்களும் கடலில் மூழ்கின. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்க ராணுவம் வீடியோவையும் வெளியிட்டுள்ளது. ஓமன் வளைகுடா பகுதியில் ஈரானின் கைலோ கப்பல் கடலில் மூழ்கியதாகவும், அமெரிக்க வீரர்கள் துல்லியமான தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஈரான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் அதுமீறல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என அறிவித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் நுழைந்த அமெரிக்காவின் ஆளில்லாத ட்ரோன் படகையும் ஈரான் தகர்த்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.
ஈரான் நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், ஈரானின் நலனுக்கு எதிராக செயல்படும் நாடுகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். எங்கள் பதில் தாக்குதல் மிக மோசமானதாகவும் அதிக வலியைக் கொடுப்பதாகவும் எச்சரித்துள்ளார்.