புதுடெல்லி: பிப்ரவரி 7-
உபெர், ஓலா, ரேபிடோ ஓட்டுநர்கள் இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அதன்படி ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் குறைந்தது ஆறு மணி நேரத்திற்கு செயலியிலிருந்து வெளியேறி தங்களது பணிகளை நிறுத்தத் திட்டமிட்டுள்ளனர். ஊதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடக்கிறது. இதனால் வாடகை கார்கள், ஆட்டோ மற்றும் பைக் டாக்சிகளின் சேவை விடுமுறை நாளான இன்று கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தெலங்கானா கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர் சங்கம் இந்த வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. இதற்கு தேசிய அளவிலான பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.












