தமிழகத்தில் இரண்டு நாள் தீவிர கனமழை

டெல்லி, ஆக். 3 – தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நெல்லை, குமரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘அடுத்த மூன்று நாட்களுக்கு கேரளா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை தொடரும். கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகள் உட்பட இந்தியாவின் தெற்கு தீபகற்பத்தில் இந்த வாரம் மிக கனமழை நீடிக்கும்.ஆகஸ்ட் 3 மற்றும் 4 தேதிகளில் பெங்களூரில் மிதமானது முதல் கனமழை பெய்யும்.
நாட்டின் மத்திய மாநிலங்களான மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.ஆகஸ்ட் 5 முதல் மத்திய மற்றும் வட மாநிலங்களில் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தேசிய தலைநகரில் புதன்கிழமை லேசான மழை பெய்யும், அதே நேரத்தில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நெல்லை, குமரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.