Home மாவட்டங்கள் பெங்களூர் திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடிபலத்த பாதுகாப்பு

திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடிபலத்த பாதுகாப்பு

மதுரை: மார்ச் 1-
தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி இன்று பிற்பகல் திருப்பரங்குன்றத்தில் சாமி தரிசனம் செய்கிறார். மதுரையில் இன்று மாலை நடைபெறும் NDA கூட்டணி கட்சிகளின் 2வது பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி. எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக – பாஜக இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது கூட்டணியைப் பலப்படுத்தி வருகிறது. அந்த வகையில், அன்புமணி தலைமையிலான பாமக, அமமுக, தமாகா, இந்திய ஜனநாயகக் கட்சி, தமமுக, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. கடந்த மாதம் மதுராந்தகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த கட்சிகளின் தலைவர்கள் மேடையேறினர்.
இன்னும் சில கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய இருப்பதாக அந்த கூட்டணித் தலைவர்கள் தொடர்ச்சியாகக் கூறி வந்தனர். மேலும் தேமுதிக, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவார்கள் என்று கூட்டணித் தலைவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர்கள் இருவரும் திமுக கூட்டணியில் இணைந்துள்ளனர். இது அதிமுக – என்.டி.ஏ கூட்டணியினருக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. இந்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிரமாண்ட மாநாடு இன்று மாலை மதுரையில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று சென்னை வந்துடைந்தார். அவரை ஆளுநர் ஆர்.என். ரவி, இணையமைச்சர் எல்.முருகன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர். ஆளுநர் ஆர்​.என்​.ரவி வரவேற்​றார். இரவு ஆளுநர் மாளி​கை​யிலேயே பிரதமர் தங்கி ஓய்​வெடுத்​தார்.
இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்திருக்கும் பிரதமர் மோடி, இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக புதுச்சேரி செல்கிறார். அங்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, சுமார் 2,700 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பொதுமக்களுக்கு நாட்டுக்கும் அந்த திட்டங்களை அர்ப்பணிக்க இருக்கிறார்.
அதனை தொடர்ந்து இன்று மதியம் மதுரை செல்லும் பிரதமர் மோடி, திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். அதனைத் தொடர்ந்து மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார். இதற்​காக 150 ஏக்​கர் பரப்​பில் பொதுக்​கூட்ட அரங்கு அமைக்​கப்​பட்டுள்ளது. மதுரையில் இன்று மாலை நடைபெறும் NDA கூட்டணி கட்சிகளின் 2வது பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி. எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். அதைத்தொடர்ந்து இன்று இரவு 6 மணி அளவில மதுரையிலிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு டெல்லி செல்கிறார்.