வெனிசுலாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் ரூ.27,000 கோடி மிச்சமாகும்

மும்பை: பிப்ரவரி 7-
ரஷ்​யா​வுக்கு பதிலாக வெனிசுலா​விலிருந்து கச்சா எண்​ணெய் வாங்க இந்​தியா ஒப்​புக்​கொண்​டுள்​ள​தாக கூறப்​படும் நிலை​யில், அதனால் ரூ.27,000 கோடி வரை அதாவது 300 கோடி டாலர் வரை சேமிக்க முடி​யும் என எஸ்​பிஐ ஆய்​வறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.இதுகுறித்து அந்த அறிக்​கை​யில் மேலும் கூறப்​பட்​டுள்​ள​தாவது: இந்​தி​ய-அமெரிக்க வர்த்தக ஒப்​பந்​தத்​தின் மூலம் இந்​தி​யா​வுக்கு பல ஆதா​யங்​கள் கிடைக்​கும் நிலை​யில் அதில் முக்​கிய​மாக வெனிசுலா கச்சா எண்​ணெய் மூல​மாக கிடைக்​கும் ஆதா​யம் முதலிடத்​தில் உள்​ளது. இதன் மூலம், இந்​தியா ஆண்​டுக்கு 300 கோடி டாலரை மிச்​சப்​படுத்த முடி​யும்.ரஷ்​யா​விலிருந்து கச்சா எண்​ணெய் பெறு​வதைக் குறைத்​து, வெனிசுலா​விலிருந்து ‘மெரி 16’ வகை கனரக கச்சா எண்​ணெயை இறக்​குமதி செய்​வதன் மூலம் இந்​தியா இந்​தச் சேமிப்பை செய்​வது சாத்​தி​ய​மாகும்.20 டாலர் தள்ளுபடி: வெனிசுலா எண்​ணெய்க்கு ஒரு பேரலுக்கு 10 முதல் 12 டாலர் வரை தள்​ளு​படி கிடைக்க வாய்ப்​புள்​ளது. இது உள்​நாட்​டுப் பணவீக்​கத்​தைப் பாதிக்​காமல், ரஷ்ய எண்​ணெய் தள்​ளு​படி நிறுத்​தப்​படு​வ​தால் ஏற்​படும் இழப்​பை​யும் ஈடு​செய்ய உதவும்.சாதகமான அம்சம்: அமெரிக்கா விதித்​துள்ள வரிக் குறைப்​பு, இந்​தி​யப் பொருட்​களின் ஏற்​றும​தித் திறன் அதி​கரிப்​பு, பணவீக்​கக் கட்​டுப்​பாடு போன்​றவை இந்​தி​யப் பொருளா​தா​ரத்​திற்​குச் சாதக​மான அம்​சங்​களாக உள்​ளன.உக்​ரைன் போருக்​குப் பிறகு இந்​தி​யா​வின் ரஷ்ய எண்​ணெய் இறக்​குமதி 30 சதவீதத்​தைத் தாண்​டியது. தற்​போது வெனிசுலா, ஈராக், சவுதி அரேபி​யா, ஐக்​கிய அரபு அமீரகம் உள்​ளிட்ட 40 நாடு​களி​லிருந்து எண்​ணெய் பெறும் வாய்ப்பு இந்​தி​யா​வுக்கு உள்​ளது.அதே வேளை​யில், விவ​சா​யம் மற்​றும் பால் பண்ணை போன்ற முக்​கிய உள்​நாட்டு தொழில் துறை​களைப் பாது​காக்க வேண்​டிய பொறுப்​பும் உள்​ளது. குறிப்​பாக, இந்​திய விவ​சா​யிகளுக்கு வாழ்​வா​தா​ர​மாக விளங்​கும் பால் உற்​பத்​தித் துறை​யில் எவ்​வித பாதிப்​பும் ஏற்​ப​டா​மல் வர்த்தக தாராளமய​மாக்​கல் கவன​மாக மேற்​கொள்​ளப்பட வேண்​டும். ஒட்​டுமொத்​த​மாக பார்க்​கை​யில், இந்த ஒப்​பந்​தம் இந்​தி​யா​வின் ஏற்​றும​தித் திறனை வலுப்​படுத்​து​வதுடன், எரிசக்தி பாது​காப்​பை​யும் உறுதி செய்​யும். இவ்​வாறு எஸ்​பிஐ அறிக்​கை​யில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.