நியூயார்க்: ஜூலை 8-
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நட்பு நாடான வடகொரியா உள்பட 14 நாடுகளுக்கு கூடுதல் வரியை விதித்துள்ளார். இந்த புதிய வரி விதிப்பு முறை ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அவர் அறிவித்துள்ளார். இதில் நம்முடன் மோதி வரும் வங்கதேசமும் இடம்பெற்றுள்ளது. அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். இவர் பதவியேற்றது முதல் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக எந்தெந்த நாடுகள் எல்லாம் அமெரிக்காவுக்கு அதிக வரிகளை விதிக்கிறதோ, அந்த நாடுகளுக்கு அமெரிக்காவும் அதிக வரிகளை விதிக்கும் என்று அதிரடியாக அறிவித்தார். இந்த வரி விதிப்பில் முதற்கட்டமாக கனடா, சீனா ஆகியவை தான் பாதிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் ஏராளமான வரியை டொனால்ட் டிரம்ப் விதித்தார். மெக்சிகோவிற்கு கூடுதல் வரியை டொனால்ட் டிரம்ப் விதித்தாலும் கூட அது தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பொருட்களுக்கு இந்தியா விதிக்கும் வரி என்பது டொனால்ட் டிரம்பை உறுத்தி கொண்டே இருக்கிறது. அதேபோல் பிற நாடுகளுக்கும் கூடுதல் வரிகளை விதித்தார் டிரம்ப். அதாவது தங்களின் வர்த்தக பற்றாக்குறையை சரிசெய்யும் வகையில் டிரம்ப் இந்த வரிகளை விதித்தார். அதன்பிறகு கடந்த ஏப்ரல் 2ம் தேதி ‛விடுதலை நாள்’ என்ற பெயரில் இந்தியா உள்பட 100க்கும் அதிகமான நாடுகளுக்கு பரஸ்பர வரியை விதித்தார். இந்தியாவுக்கு 26 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 90 நாட்களுக்கு வரி விதிப்பு முறை நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து முதற்கட்டமாக தற்போது 14 நாடுகளுக்கு கூடுதல் வரியை டொனால்ட் டிரம்ப் விதித்துள்ளார். அதன்படி வடகொரியா, ஜப்பான், மலேசியா, துனிசியா, 25 சதவீத வரி, மியான்மர், லாஸ் நாடுகளுக்கு 40 சதவீத வரி, தென்ஆப்பிரிக்காவிற்கு 30 சதவீத வரி, இந்தோனேஷியாவிற்கு 32 சதவீத வரி, வங்கதேசம், செர்பியாவிற்கு 35 சதவீதம், போஸ்னியா மற்றும் ஹெர்ஜிஜோவினாவிற்கு 30 சதவீதம், கம்போடியா, தாய்லாந்துக்கு 36 சதவீத வரிகளை விதித்துள்ளார். இந்த புதிய வரி ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
Home செய்திகள் உலக செய்திகள் அமெரிக்காவிடம் சிக்கிய வங்கதேசம்.. 14 நாடுகளுக்கு 25- 40% வரி போட்ட டிரம்ப்

















