
சென்னை, பிப். 14- ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று ஏ பிரிவில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற லீக்ஆட்டத்தில் அமெரிக்கா – நெதர்லாந்து அணிகள்மோதின. முதலில் பேட் செய்த அமெரிக்க அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள்இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாய் தேஜா முக்கமல்லா 51 பந்துகளில்,
4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் விளாசினார். முன்னதாகதொடக்க வீரர்களான கேப்டன் மோனங்க் படேல் 22 பந்துகளில், 36 ரன்களும் சஹாயன்ஜகாங்கிர் 14 பந்துகளில் 20 ரன்களும் சேர்த்துஆட்டமிழந்தனர். சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி 1 ரன்னில் வெளியேறினார். இறுதிக்கட்ட ஓவர்களில் சுபம் ரஞ்சனே 24 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் விளாசினார். நெதர்லாந்து அணி சார்பில் பாஸ் டி லீடு 3 விக்கெட்கள் வீழ்த்தினார். இதையடுத்து 197 ரன்கள்இலக்குடன் பேட் செய்த நெதர்லாந்து 15.5 ஓவர்களில்103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பாஸ் டி லீடு 23, ஸ்காட் எட்வர்ட்ஸ் 20 ரன்கள் சேர்த்தனர். அமெரிக்க அணியின் பந்துவீச்சில் ஹர்மீத் சிங் 4 விக்கெட்களை சாய்த்தார். சால்விக் 3, முகமது மோசின் 2 விக்கெட்களை வீழ்த்தினர். 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அமெரிக்க அணி நடப்பு தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவிடமும் 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானிடமும் தோல்வி அடைந்திருந்தது. நெதர்லாந்து அணிக்கு இது 2-வது தோல்வியாக அமைந்தது.




















